இயேசு யார்? WHO IS JESUS? 64-06-20B 1. என்னைப்போல, நாம் சாப்பிட்டவை இதுவரை, ஒரு வழக்கமான அறுசுவை உணவுத் திருவிழாவாக, நாம் இந்தக் காலை உணவை எடுத்துக்கொண்டோம். வழக்கமாக அது ஒரு துண்டு குளிர்ந்த ரொட்டியோடு சிறிது ஜெல்லி (பழச்சாற்றினால் ஆன பாகு - தமிழாக்கியோன்) அதைச் சுற்றிலும் இருக்கும். அன்று ஒரு நாள் நான் ஃபீனிக்ஸில் இருந்தபோது, அவர்கள் எனக்கு... பணியாரங்களைக் கொடுத்தார்கள். தெற்கத்திய பிராந்தியங்களில் அதை நாம் பிளாப்ஜேக்ஸ் (Flapjacks) என்று கூறுவோம். மேலும் அதனோடு எந்த சர்க்கரைப் பாகையும் அவர்கள் சேர்க்க வில்லை. அதனால் நான் சர்க்கரையை எனக்காகச் சேர்த்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர்கள் வெறு மனே... மற்றும் இப்பொழுது இங்கு நாம் ஒரு அருமையான நேரத்தைப் பெற்றிருந்தோம்! அது மாம்ச ரீதியில், அது மட்டும் அல்ல, நாம் ஆவிக்குரிய ஒன்றையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். 2. இந்த சிறிய சகோதரனுடைய சாட்சியைக் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. அன்று ஒரு காலையில் அவனுடைய படுக்கைக்கு அருகே வரும்படி நான் அழைக்கப்பட்டேன், அவர்கள் ஏதோ நடந்ததாக என்னிடம் கூறினார்கள். இந்தக் கூட்டத்திற்குப் பொறுப்பேற்றுக்கொள்ள முயற்சித்தவர்களில் முதன்மையான ஒருவராக அவர் இருந்தார் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாகவே, அந்த தேவனுடைய மனிதனுக்கு அதைச் (பொல்லாங்கு) செய்ய சாத்தான் முயன்றிருக்கிறான். ஆனால் நீங்கள் பாருங்கள் தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை, அவர் தமது வல்லமையைக் காண்பிக்கும் பொருட்டு, அதைச் சரியான ஒரு மேலான சாட்சியாக மாற்றுகிறார். தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் படிச் செய்வார். ஆகவே அந்த சாட்சியைக் கேட்பதற்கு நன்றியுடையவர்களாய் இருக்கிறோம், சகோதரனே. 3. மேலும் இந்தப் பட்டணத்திலே நான் உங்களோடு இருப்பது நிஜமாகவே எனக்கு மிகுந்த சிலாக்கியமாக உள்ளது. ஆகவே தான், இதைக் குறித்து நான் எவ்வளவாக உணருகிறேன் என்பதை வெறுமனே வெளிப்படுத்த முடிய வில்லை... இப்போது, நிரம்பி வழியக்கூடிய அதிகக் கூட்டங்களும், மற்றதும் இல்லை... சில நேரங்களில் நமக்கு இருப்பது போன்று. ஆனால் இது... தேவன் ஏதோ வொன்றை பொருத்துவதற்கும் அல்லது இது ஏதோ வொன்றை நிலைப்படுத்துகிறதற்கும், ஜனங்களை எதற்கோ ஆயத்தப்படுத்துகிறதற்கோ, அவர்கள் எங்கே இருக்க வேண்டுமோ அந்த ஸ்தானத்திற்கு (இடத்திற்கு) மீண்டும் கொண்டு வருவதற்கும், மேலும், இந்த அருமையான போதகர்களைச் சந்திக்கவும் இது போன்ற பிறவற்றிற் காகவும் இருக்கலாம் என்பது போல இருக்கிறது. 4. மேலும் இப்போது இந்தக்காலை வேளையிலே இங்கே வந்திருப்பதின் சிலாக்கியமானது, பூரண சுவிசேஷ வர்த்தக மனிதர்களுக்காகப் பேசுவதாய் உள்ளது. இங்கே யுள்ள இந்தக் காரியங்கள் இன்னும் அது தன் குழந்தைப் பருவத்தில் இருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன். இது மிகவும் சிறியது. இங்கே உள்ள சகோதரர் சொன்னதுபோல அவர்களுக்கு (வளர்ந்த) புருஷர்கள் தேவையாய் இருகிறார்கள். 5. நல்லது, உலகத்தைச் சுற்றியுள்ள அநேக, பெரிய நல்ல பல ஸ்தாபனங்களை நான் பிரதிநிதித்துவம் செய் திருந்தபோது, அவற்றில் எல்லாம், முழு சுவிசேஷம், அநேக பாப்டிஸ்டுகள் மற்றும் வேறுபட்டவைகள் உள்ளன, ஏன்? நான் இன்னும்கூட ஒரு வகையான குழுவைச் சார்ந்துள்ளேன், அது – அதுதான் வர்த்தக புருஷர் குழு - ஏனெனில் இது எந்த ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தையும் பிரதிநிதித்துவம் செய்வதில்லை, அது தன்னுடனே - இது - இது - சர்வ சுவிசேஷத்திற்குள் அடங்கிய ஒரு குழுவாக உள்ளது. இது வெறுமனே முழு சுவிசேஷத்தை தவிர எதையுமே பிரதிநிதித்துவம் செய்வதில்லை. ஆகவே அதற்காக நாங்கள் சந்தோஷப்படுகிறோம். 6. மேலும் நான் நினைக்கிறேன், இங்கே இப்பட்டிணத் திலுள்ள புருஷர்களாகிய நீங்கள் அதாவது... உண்மை யாகவே, நான் உங்களிடம் கூறுவது உண்மை என்பதை நீங்கள் நம்பினால், முழு சுவிசேஷ வர்த்தகர்களும் ஐக்கியத்திற்காக ஒன்றுகூட வேண்டிய நேரம் இதுவாக உள்ளது. ஒரு சனிக்கிழமை காலை வேளை போன்றதான நேரத்தில் பேசுவதற்காக நீங்கள் கூடும்போது ஒருவரிட மிருந்து ஒருவர் கற்றுக் கொள்வீர்கள். 7. தலைவரான... சர்வதேச தலைவர் சகோதரர் ஷக்காரியன், அநேக வருஷங்களுக்கு முன்பு நான் அவ ரோடு அறிமுகம் பண்ணப்பட்டேன். உங்களில் அநேக ருக்கு அந்த மேசையின் மேல் தந்திகள் இருந்ததும், அதை எடுப்பதற்காக சகாரியன் என்ற பெயர் கொண்ட ஒரு பெண்மணி இருந்தாள் என்றும் தெரியும். அவள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டிருந்தாள். அந்த வேளையிலே எப்படியோ கர்த்தர் என்னை அங்கு வழிநடத்தினார். அப்படித்தான் எனக்கு அந்த ஷக்காரியர் களோடு அறிமுகம் ஏற்பட்டது. அவள் சுகமாக்கப் பட்டபோது அங்கேதான் டாக்டர் தியோடோர் பலோ வியாஸ் அங்கே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். அங்கே அவர் ஒரு மருத்துவராய் இருக்கிறார். ஒரு கிரேக்க மருத்துவர். 8. அவர் “நீங்கள் இந்த ஜனங்களை தவறான காரியத்திற்குள்ளாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். மற்றும், “அந்த ஸ்திரீ அங்கே மரிக்கும் நிலை யில் படுத்துக்கொண்டிருக்கிறாள்” என்றார். 9. நான் முதலாவதாக அந்த வீட்டிற்கு சென்றபோது, அவர் கூறியதாவது, “இப்பொழுது உள்ளே செல்லும்போது மரியாதையுடனும், அமைதியாகவும் இருங்கள். ஏனென் றால், அந்தப் பெண்மணி மரித்துக்கொண்டிருக்கிறாள். அவள் இங்கேதான் இருந்து வந்துள்ளார், மற்றும் அவளுடைய இருமார்பகங்களும் அகற்றப்பட்டுள்ளன. அவள் வீக்கமுற்று, அவள் மரிக்க வேண்டியவளாயிருக் கிறாள். நீர் அங்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார். நானும் அவரது விரிவுரையை சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர், “இப்போது நிஜமாகவே அமைதியை கடைபிடியுங்கள், சத்தமாக ஜெபிக்கவோ அல்லது எதுவுமே செய்யாதீர்கள். உங்களது சிறிய ஜெபத்தைச் செய்துவிட்டு கீழே திரும்பி வந்துவிடுங்கள்” என்று சொன்னார். நான் சொன்னேன், “சரி ஐயா.” 10. ஆகவே நான் சென்றேன். நான் அதைக் கேட்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும்; உங்களுக்கும் தெரியும்; நான் சொன்னேன், நாங்கள்... மாடியின் மீது நான் ஏறினேன். அங்கே... நான் எடுத்தேன் என்று நம்புகிறேன்… இப்பொழுது நினைவிற்கு வந்துவிட்டது. இப்போது மாடிக்கு சென்றேன். மேலும் அங்கே ∴ப்ளோரன்ஸ் (FLORENCE), பிறகு ஒரு அழகான பெண் பிள்ளை மற்றும் ரோஸ் (ROSE) எல்லோரும், அவர்கள் எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருந்தனர்; அவர்களது தாயார் சுயநினைவின்றி அங்கே படுத்துக் கொண்டிருந்தார், சில நாட்களாக சுயநினைவின்றி, முற்றிலும் வீக்கமுற்ற நிலையில் இருந்தார்கள். 11. எனவே நான் ஜெபிப்பதற்கு முழங்கால் படியிட் டேன், நான் அவ்வாறு செய்யும்போது, கர்த்தருடைய தூதன் அங்கே வந்து, படுக்கையின் அருகில் வந்து, “இன்னும் மூன்று நாட்களில் அவள் எழுந்துவிடுவாள்” என்று கூறினார். 12. ஆகவே நான் வெறுமனே திரும்பி, வெளியே வர ஆரம்பித்தேன். அவர்கள் என் பின்னே வந்தார்கள். நான், “இன்னும்... இது கர்த்தரின் நாமத்தில், அவள் சுகமடைந்து விடுவாள்” என்றேன். உடனே அவர்கள் கூச்சலிட ஆரம்பித்துவிட்டனர். 13. இங்கே டாக்டர் பலோவியஸ் வந்து, என்னை வீட்டை விட்டு வெளியே போகும்படி விரட்டினார். அவர் வெறுமனே... நான் சொன்னேன்... அவர், “ரொம்ப நல்ல எண்ணம்” என்றார். நான் கூறினேன்... அவர், “நன்றாக உள்ளது; அந்த ஜனங்களைத் தவறான நம்பிக்கையில் கட்டுகிறீர்கள். அந்த ஸ்திரீ மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்றார். 14. நான், “இது எல்லாம் உங்களுடைய கணக்கியலின் படி இருக்கிறது. ஆனால், கர்த்தருடைய வார்த்தையின்படி அப்படி இல்லை, பாருங்கள் அவள் ஜீவிக்கப்போகிறாள்” என்றேன். 15. “முட்டாள்தனம்” என்று அவர் கூறி, “நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போங்கள், இங்கிருந்து வெளியே போய் விடுங்கள்” என்றார். 16. அப்போது சகோதரர் ஷக்காரியன் மேலே வந்து “ஒரு நிமிடம் பொறுங்கள்” என்றார். பாருங்கள்! அவர், “நீங்களும் இங்கே கீழே இருந்தீர்கள், உங்கள் மருத்துவத் திற்காக உங்களைப் பாராட்டுகிறோம்” என்று கூறி, மேலும் அவர், “ஆனால், நாங்கள் சகோதரர் பிரன்ஹாமையும் கூட அழைத்தோம், எங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் எந்த ஒன்றையும் நீங்கள் செய்யவில்லை. அவர் அதை செய்கிறார், பாருங்கள்” என்றார். 17. மேலும் நான் சொன்னேன், “நான் என்ன செய் வேன் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு வேளை, அவள் எழுந்து மீண்டும், மூன்று நாட்களுக்குள் வெளியே வராவிட்டால், நான் என்னுடைய முதுகில் கள்ளத்தீர்க்கதரிசி என்று கையொப்பமிட்டு, லாஸ் ஏஞ்சலிஸில் சரியாக இங்கே போகலாம். நீங்கள் உங்கள் காரில் அமர்ந்து கொண்டு, வீதிகளின் வழியே, ஒலிப் பானை ஊதிக்கொண்டு, என்னை காண்பித்து செல்லுங்கள். பாருங்கள்! ஆனால் ஒருவேளை அவள் எழுந்திருந்தால், நான் உங்கள் முதுகில் “போலி மருத்துவர்” என்று எழுதி உங்கள் காரில், ஊதிக்கொண்டு செல்லட்டும் பாருங்கள்.” (சபையார் சிரிக்கிறார்கள்-ஆசி) அவரால் அப்படிச்செய்ய முடியாது. சிறிதுகாலம் கடந்த பின்பு, ஒரு பாசன கால்வாயில் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அவர் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறார். அதிலிருந்து, அவர் பரமவீட்டிற்கு மகிமையில் எடுத்துக் கொள்ளப்பட்டார். 18. ஆகவே எனக்கு ஷக்காரியர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பிற்காலத்தில் அவர்களது அமைப்பின் முதல் அத்தியாயத்தில், அவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு பாகமாக இருந்தேன். மேலும் தேசத்தினூடாக கடந்து, உலகம் முழுவதும் அவர்களது அத்தியாயத்தில் அவர் களுக்கு உதவியிருக்கிறேன். அவர்கள் மிகவும் அருமை யான புருஷர்களைக் கொண்ட ஒரு குழுவாக உள்ளனர். 19. நான் நினைக்கிறேன்... நீங்கள் - இங்கே உங்கள் ஐக்கியத்தைப் பலப்படுத்தாததன் காரணமாக நீங்கள் எதையோ இழக்கின்றீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒரு ஐக்கியமாயுள்ளது. நாம் ஒன்றாகக் கூடவேண்டும். வேதாகமம் இவ்வாறாக கூறுகிறது: “நாளானது சமீபித்து வருவதை நாம் காண்கையில், சபை கூடிவருதலை நாம் விட்டு விடாதிருப்போமாக.” அதை மட்டும் அது செய்யாது. அது உங்களை பலப்படுத்தும் மற்றும் உங்கள் பலமானது சபையை பலப்படுத்தும். அது எல்லாமுமாயிருக்கிறது. இதுதான் எல்லாம்... “இது தான் நம்முடைய குழு” என்று சொல்லத்தக்க வகையில், முழு சுவிஷேச அல்லது வர்த்தக புருஷர்கள் என்பது ஒரு தனிப்பட்ட ஸ்தாபனம் அல்ல. இது அனைத்து விசுவாசிகளும் ஒன்று கூடும் இடமாக உள்ளது. மேலும், வெறுமனே இது சபையின் ஒரு பகுதியாக உள்ளது. பாருங்கள், இதுவும் சபைதான், ஆவிக்குரிய விசுவாசிகள். நீங்கள் - நீங்கள் அதை செய்வீர்களானால், அது - அது ஒரு அருமையான காரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு சிறிய வகையான காரியமாக... ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். 20. இது பரிசுத்தக் குலைச்சல் போன்று காணப்படு வதாக இல்லை என்று நம்புகிறேன். ஆனால் சிறிது காலத்திற்கு முன்னர் என்னிடம் யாரோஒருவர், ஒரு ஜெப கூட்டத்தில் ஒரு மனிதன், “நீங்கள் ஒரு பிரசங்கியார் தானே” என்றார். 21. அதற்கு நான், “நீங்கள் கூறினது பாதி சரியானது என்று யூகிக்கிறேன்” என்றேன். முழு சுவிசேஷ மக்களி டையே, பிரசங்கிமார்களைக் குறித்து நான் கூறுவது எனக்கு ஒருவித பயத்தை உண்டு பண்ணினது. 22. உங்களுக்குத் தெரியுமா, என் - என்னுடைய தகப்பனார் ஒரு - ஒரு - ஒரு சவாரி செய்பவர். அவர் குதிரை சவாரி செய்பவர். உங்களுக்குத் தெரியுமா, நான் சிறுபையனாய் இருந்த போது நானும்கூட ஒரு சவாரி செய்பவனாக ஆவேன் என்று நான் நினைத்தேன். எப்படி சிறுபையன்கள் தங்கள் தந்தையைப் போல ஆகவேண்டும் என்று நினைப்பார்களோ, அப்படியே நானும்கூட ஒரு சவாரிசெய்பவன் ஆகவேண்டும் என்றுஎண்ணியிருந்தேன். ஆகவே நான் என் தந்தையை வீட்டிற்கு பின்புறமாக அனுப்பிவிட்டு அதுவும் அவர் ஏர் உழும்போது, நான் என்னுடைய ஏர் உழும் வயதான குதிரையை எடுத்துக் கொண்டு கீழே உள்ள பழைய தண்ணீர் தொட்டிக்கு கூட்டிச் செல்வேன், அது ஒரு மரத்தடியிலிருந்து வெட்டப்பட்டது. 23. எத்தனைப் பேர் அதை எப்போதாவது பார்த்திருக் கிறீர்கள்?... நல்லது, கென்டக்கியின் எந்தப் பகுதியிலிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள்? ஓ! எத்தனைப் பேர் வைக்கோல் படுகையின் மீது எப்போதாவது படுத்து உறங்கியிருக் கிறிர்களா? நல்லது, நான் வெறுமனே என் கோட்டையும் என்னுடைய ‘டை’ யையும் கழட்டலாமென்று பார்க்கிறேன். நான் நிஜமாகவே இங்கே (என்) இல்லத்தில் இருப்பதுபோல் இருக்கிறேன். நல்லது, அதுவே - அதுவே என்னுடைய சூழல். 24. எனவே, நான் அங்கே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என் தந்தை ஒரு சேணத்தை வைத்திருந்தார். உங்களுக்குத் தெரியுமா, ஆகவே நான் அவர் தம்முடைய இடத்திலிருந்து திரும்பிவரும் வழியைப் பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு நான் அந்த வயதான ஏர் குதிரையை எடுத்துக் கொள்வேன். என்னுடைய எல்லா சகோதரர்களையும் கூட்டிக்கொண்டு வேலியின் மீது சுற்றிலும் அவர்களை உட்கார வைப்பேன். உங்களுக்குத் தெரியுமா, ஒன்பது பேரில் நான்தான் மூத்தவன். நான் போய் உணவுக்காக கைநிறைய ஒருவகை தின்பண்டத்தை எனக்காக எடுத்துக்கொண்டு சேணத்தின் அடியில் வைத்து விடுவேன். மேலே இழுத்துவிட்டு, அதன் மீது ஏறுவேன். என்னே! பாவம் அந்த வயதான பிராணி, மிகுந்த சோர்வுடன், தரையிலிருந்து தன் கால்களையும்கூட எடுத்து உயர்த்த முடியாமல், அது மிகுந்த சப்தத்தை எழுப்பி என்னை சுமந்து செல்லும். அந்த தின்பண்டம் அதின்மீது ஒட்டிக்கொள்ளும். உங்களுக்குத் தெரியுமா, கீழே அதன்மீது இழுத்துவிடுவேன். ஆகவே நான் என் தொப்பியை கழற்றிவிட்டேன், நான் வெறுமனே... நான் நிஜமாகவே ஒரு (Cowboy) குதிரை ஓட்டும் கதாபாத்திரமாக இருந்தேன். (அமெரிக்க நாட்டுப்புற கதைகளில் ஒரு புகழ்பெற்ற கதாபாத்திரம் “Cowboy – குதிரை சவாரிக்காரன்” – தமிழாக்கியோன்.) நான் நிறைய, அதிகமான பத்திரிக்கை இதழ்களை(Magazine) வாசித்திருக்கிறேன். ஆகவே நான் என் சகோதரர்களை நான் தான் நிஜமான cowboy - குதிரை சவாரிக்காரன் என்று நம்ப வைத்தேன். நீங்கள் பாருங்கள், ஆகவே நான் அப்படியே இருந்ததாக எண்ணிக் கொண்டேன். 25. எனக்கு பதினெட்டு வயதான போது நான் வீட்டிலிருந்து வெளியேவந்து அரிசோனாவுக்குச் சென்றேன். அங்கு அவர்களது குதிரைகளை அடக்கிப் பழக்குவிக்க நான் அவர்களுக்குத் தேவையாயிருந்தேன். அது எனக்கு நிச்சயமாய் தெரிந்தது. அவர்கள் வெறுமனே... நான் அவர்களுக்கு தேவைப்பட்டேன். ஆகவே நான் வீட்டை விட்டுப் போக வேண்டியதாயிற்று. அதற்குரிய வயதில்லை. ஆனாலும் நான் வெளியேறினேன். அது ஃபீனிக்ஸ் (Phoenix) என்ற இடத்தில் குதிரை காட்சிப் போட்டி (rodeo) நடக்கும் சமயமாயிருந்தது. ஆகவே நான் அங்கே போய், அவர்களது இருப்புகளை (குதிரைகளின் நிலைகளை) பார்க்கவும், எதில் நான் சவாரிச் செய்யப் போகிறேன் என்று பார்க்கவும் சென்றேன். நான் சவாரி செய்ய இருந்த அந்த குதிரையை வேறு யாராலும் அடக்க முடியாது. அது வெள்ளி சேணம் பரிசளிக்கப்பட்ட குதிரை. 26. நான் ஒரு சிறிய பையனாக இருந்தேன். எப்பொழு துமே மிகவும் சிறியவனாக இருந்தேன். - நான் எனக் கென்று ஒரு ஜோடி மேற்கால்சட்டையை வாங்கவேண்டும் (pair of chaps – தோலினால் செய்யப்பட்ட கால்களில் அணியும் உடை – த.ஆ.) என்று நினைத்தேன். என் தகப்பனார் அவைகளை அணிந்திருந்தார் என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் அவருக்கு எதுவும் இல்லா திருந்தது. எனவே நான் எனக்கென்று... நான் ஒரு அழகான ஜோடியை கண்டேன். உங்களுக்குத் தெரியுமா, அதன் அடியில் அ-ரி-சோ-னா-என்றிருந்தது, மேலும் மிருகத்தின் தலை உருவம் (steer heads) மற்றும் அது போன்று காரியங்கள் அதில் இருந்தன. நான், “ஓ! என்னே! நான் அதை அணிந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கப் போகிறது” என்று நினைத்தேன். உங்களுக்குத் தெரியுமா, எப்பேற்பட்ட ஒரு சிறுவன், நான் என் மீது அதை இழுத்து வைத்துப் பார்த்தேன், ஏறக்குறைய (அந்த உடையின் மீதமுள்ள) பதினெட்டு அங்குல நீளம் தரையில் தான் கிடந்தது. நான் பார்ப்பதற்கு ஒரு பேண்டம் கோழியைப் (bantam chickens) போல காணப்பட்டேன், உங்களுக்கு தெரியுமே, அதன் மீது இறகுகள் அவ்விதமாக காணப் படும். “அது வேலைக்கு ஆகாது” என்று நான் நினைத் தேன்; ஆகவே நான் வெறுமனே சென்று, எனக்கென ஒரு ஜோடி கால்சட்டையை (pair of Levis - முரட்டு துணியா லான உடை – த.ஆ.) பெற்றுக் கொண்டேன். 27. மேலும், “நான் சிறிது பணம் சம்பாதிக்கலாம்” என்று நான் நினைத்தேன். ஆகவே நான் வெளியே சென்று அங்கு நின்றிருந்த குதிரைகளை மேலும் கீழும் பார்த்தேன், அவை மிகவும் காட்டுத்தனமாக, வைக் கோலைக்கூட சாப்பிடாத வைகளாக அந்த குதிரை லாயத் தில் இருந்தன. “ஓ! என்னே” என்று நான் நினைத்தேன். 28. ஆகவே முதல் தடவையாக அவர்கள் வெளியே கொண்டு வந்தார்கள். இது வினோதமான... இன்று காலை சொல்கிறேன். இந்த நேரம்வரை இதை ஒருபோதும் நினைக்கவேயில்லை. ஆனால் அந்த மதிய வேளையில், அந்த போட்டியில் “கன்சாஸ் அவுட்லா” என்று அந்த முதல் குதிரை அழைக்கப்பட்டது. அது கன்சாஸ் என்ற இடத்திலிருந்து வந்திருந்தது. பதினேழு அடி உயரமுள்ள இனமாக இருந்தது. ஆகவே அங்கிருந்த அந்த ஒரு புகழ்வாய்ந்த குதிரை ஓட்டுபவன் அதை ஓட்ட வேண்டி யிருந்தது. 29. ஆகவே நான் அந்த (குதிரை) பட்டியின் வேலியின் மீது ஏறி, சவாரி செய்யும் மற்றவர்களைப்போல, உங்களுக்குத் தெரியுமல்லவா, அங்கே உட்கார்ந்துக் கொண்டேன். அவர்கள் இந்தத் தொப்பியை பின்னால் இழுத்தார்கள். “நான் பார்ப்பதற்கு ஒரு நிஜமான குதிரை ஓட்டுபவனாக இருக்கிறேன்,” என்று நினைத்தவனாய், கவனித்து கொண்டிருந்தேன். 30. எனவே, இந்த குதிரை எல்லாவித அலங்காரத் தோடும் வெளியே வந்தது. அவன் – அவன் - அவன் அந்தக் குதிரையின் மேலிருந்து கீழே விழ ஏதுவாக இருந்த போது, இரண்டு மூன்று திருப்புதல் அடித்து, மற்றும் ஓட்டுபவனை கீழே விழச் செய்வதற்கு உண்டான காரியங் களை அந்த குதிரை செய்த போது (the sunfish), அந்த நபர்... குதிரை ஒரு பக்கம் சென்றது, அவன் ஒரு பக்கம் விழுந்தான். பணியாளர்கள் குதிரையை பிடித்தனர். குதிரை ஓட்டுபவனை அவசர ஊர்தி (ambulance) அழைத்துச் சென்றது. அவன் காதிலிருந்து இரத்தம் வெளியே வழிந் தோடியது. அந்தக் குதிரையும் அங்கே கடந்து சென்றது. உதவியாளர்கள் அதனை பார்த்துக் கொண்டனர். 31. அழைப்பு விடுத்தவன் வந்து, “யாராவது இந்த குதிரையின் மீது 10 வினாடிகள் தங்கியிருந்தால், அந்த மனிதனுக்கு நான் 100 டாலர் பணம் தருகிறேன்” என்று கூறினான். அவன் அங்கே கீழே நேராக நடந்தான். அங்கேயிருந்து நேராக நடந்து கொண்டே வந்தான். நேராக என்னிடம் வந்து என்னை நோக்கி, “நீ குதிரை ஓட்டுபவனா?” என்று கேட்டான். 32. நான், “இல்லை ஐயா” என்றேன். என் மனதை உடனடியாக மாற்றிக் கொண்டேன். நான் சவாரி செய்பவனாக இல்லை. 33. முதன் முதலாய் மிஷனரி பாப்டிஸ்ட் சபையில் நான் நியமிக்கப்பட்டபோது, என் கை இடுக்கில் இந்த விதமாக என் வேதாகமத்தை வைத்துக் கொண்டேன். அப்போது நான் என்னுடைய – என்னுடைய அறிமுக நற்சாட்சியைப் பெற்றேன். நான்-நான் விசுவாசத்தின் ஒரு பாதுகாவலனாக இருந்தேன், அதனுடைய காரியம் அனைத்தும் அவ்வளவு தான். நான் ஒரு பிரசங்கி என்று நினைத்துக் கொண்டேன். 34. ஒரு நாள் நான் செயின்ட் லூயிஸில் இருந்தேன், இந்தச் சிறிய டாஹர்டி (Daugherty) என்ற பெண் சுகமான போது, நான் ஒரு ஊழியக்காரன் என்று நினைத்தேன். நான் கீழே சென்று பெந்தெகொஸ்தேயினரை சந்தித்தேன். இந்த ராபர்ட் டாஹர்டியை (Robert Daugherty) உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். அவர் பிரசங்கம் செய்ததைக் கேட்டிருக்கிறேன். அந்த மனிதன் முழங்கால்கள் பிடித்துக் கொள்ளும் வரை பிரசங்கிப்பார், முகமெல்லாம் நீலமாகி விடும். கீழே தரையில் சென்று, பிறகு மீண்டும் மேடையில் ஏறி, தனது சுவாசத்தைப் பிடித்துக் கொண்டு, இரு கட்டிடங்களுக்கு அப்பால்கூட அவர் பிரசங்கிப்பதை உங்களால் கேட்க முடியுமளவிற்கு அவ்விதமாக பிரசங்கிப்பார். 35. எனது பழைய மிருதுவான பாப்டிஸ்ட் வழி முறைகள் இதைப்போன்ற வேகமான ஒன்றை நினைத்து கூட பார்த்ததில்லை. அப்பொழுதிலிருந்து, யாராவது என்னிடம், “நீங்கள் ஒரு பிரசங்கியாரா?” என்று கேட்டால், உடனே நான் “இல்லை ஐயா!” என்பேன். ஒரு விதத்தில் அதைக் கவனிக்க வேண்டும். ஒரு நபர் பிலதெல்பியாவில் என்னிடம் சொன்னார்... 36. அங்கு தான் அடுத்த சர்வதேச கூட்டம் நடக்க விருக்கிறது. நான் 29-ம் தேதி பேசவிருக்கிறேன், 29-ஆம் தேதி பொது கூட்டத்தில், மருத்துவர் பிரவுன் மற்றும் அநேக சகோதரர்களுடன் அந்தக் கூட்டத்தை துவங்க விருக்கிறேன். அது பிலதெல்பியாவில், இந்த மாதம் 29-ம் தேதியாக இருக்கிறது. கூட்டத்தை துவங்குவது, என்னு டைய சிலாக்கியமாக உள்ளது. அதனால்... மற்றும் ஓரிரு காலை உணவுகள் அவர்களுக்காக எடுக்கவேண்டும். 37. சிலர் என்னிடம், “நீங்கள் ஏன் எப்பொழுதும் ஒரு கூட்ட வர்த்தகர்களை பிடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு பிரசங்கியாராக இருக்கிறீர்கள்” என்றனர். அதற்கு நான், “நல்லது, நான்- நானும் ஒரு வர்த்தகன்” என்று கூறினேன். அவர் “நல்லது, என்ன வகையான வர்த்தகம் செய்கிறீர்கள்?” என்றார். 38. நான், “அது உறுதியளிக்கும் வர்த்தகம்” என்றேன். இதை நான் வேகமாக கூறியதால் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் பாருங்கள், அவரால் நான் என்ன கூறுகிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நான் காப்பீடு (insurance) என்று ஒரு போதும் கூறவில்லை, நான் உத்திரவாதம் (assurance) என்று தான் கூறினேன். 39. அவர், “நல்லது, நான் - நான் அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அது என்ன?... அந்த நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது? அது என்னவிதமான காப்பீடு?” என்று கேட்டார். நான், “அது நித்திய ஜீவன்” என்றேன். அவர், “நான் இதைப்போன்ற ஒன்றை கேட்டதே இல்லை. அதன் தலைமையகம் எங்குள்ளது?” என்றார். நான், “மகிமையில்” என்றேன். 40. ஆகவே உங்களில் யாருக்காவது விருப்பம் இருந்தால், அந்தப் பாலிசியைக் குறித்து ஆராதனை முடிந்தவுடன் உங்களிடம் பேசுகிறேன். 41. சிறிது காலத்திற்கு முன்பு, இன்சூரன்ஸ் பற்றியதான ஒரு காரியத்தை நான் நினைவு கூறுகிறேன். இங்கு இன்சூரன்ஸ் முகவர்கள் யாரும் இல்லை என்று நம்பு கிறேன். எனது சகோதரன் கூட ஒரு இன்சூரன்ஸ் விற்பனையாளர், ப்ருடென்ஷியல் முகவர் (Prudential). இன்சூரன்ஸ் பற்றியதான ஒரு மோசமான அனுபவத்தை பெற்றிருந்தேன் என்று எனக்கு சொல்லப்பட்டது. அவர்கள்... அந்த பாலிசியை எங்களுக்கு சரியான படி வாசித்துகூட காட்டவில்லை. இருபது வருட பாலிசிக்கு பத்து வருடம் தகப்பனார் அதற்கு உண்டான வேலையை செய்தார், செலுத்தப்பட்ட தொகைக்கேற்ப குறைந்தபட்ச தொகை பாலிசி (paid out endowment) என்று நினைத்தோம். அவைகள் பணமாக அளிக்கப்படும் நேரத்தில் அதன் மதிப்பு 7.50 டாலர்களாக இருந்தது. அது நூறு டாலர் களுக்கு உரிய மதிப்புடையது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால்... மற்றும் நான்... எனக்குத் தெரியாது. அது தவறில்லை. இன்சூரன்ஸ் நல்லது தான். அதை குறை கூறவில்லை. அது மிகவும் சரியாகத்தான் இருக்கிறது. 42. ஆகவே, எனக்கொரு இன்சூரன்ஸ் நண்பன் இருந்தான், அல்லது இன்சூரன்ஸ் விற்றுக்கொண்டு, அந்த நபரோடு நான் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அவருடைய சகோதரன் “அந்த மேலறை” (The Upper Room) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அவர் மிகவும் ஒரு நல்ல பாப்டிஸ்ட் ஊழியக்காரன், ஆகவே வில்மர் என்னிடம் பேச ஒரு நாள் வந்தான், அவன், “பில்லி நான் இன்சூ ரன்ஸ் பற்றி சிலவற்றை பேச உன்னிடம் வந்துள்ளேன்” என்றான். 43. நான், “நல்லது, வில்மர், நான் உனக்குச் சொல்கிறேன், நாம் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந் திருக்கிறோம், மேலும், எதைக்குறித்தும், நீ என்னிடம் சீதோஷண நிலை, அல்லது- அல்லது வேறு எதையாகிலும் குறித்துப்பேச வேண்டுமானால், சரிதான். அல்லது மீன் பிடிக்கச் செல்வது குறித்து அல்லது வேறு எதாவது பற்றிப்பேசுவதாய் இருந்தாலும் நான் பேசுவதற்குத் தயாராக உள்ளேன். ஆனால்;…” என்றேன். இப்பொழுது அவர், “நல்லது, உனக்கு உண்மை யாகவே ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் அவசியமாய் உள்ளது” என்றார். அப்பொழுது நான், “நான் உத்தரவாதத்தை பெற்றிருக்கிறேன்” என்றேன். 44. அப்போது அவர், “ஓ! மன்னி... அப்படியென்றால் நான் அது ஜெஸி என்று நினைக்கிறேன், அது என் சகோதரன், ஏற்கனவே உனக்கு ஒரு பாலிசியை விற்று விட்டானா?” என்று கேட்டார். 45. நான், “இல்லை” என்றேன். என் மனைவி நான் ஒரு மாய்மாலக்காரன் என்பது போல் என்னை பார்த்தாள். பாருங்கள், ஏனெனில் எனக்கு இன்சூரன்ஸ் இல்லை என்பது அவளுக்குத் தெரியும். ஆகவே என்னை நோக்கிப் பார்த்தாள். நான் “ஆமாம், நான் உத்தரவாதம் உடைய வனாக இருக்கிறேன்” என்றேன். 46. “அது என்ன?” என்றார். நான் சொன்னேன் : ஆசீர்வதிக்கப்பட்ட உத்தரவாதம், இயேசு என்னுடையவர்! ஓ, தெய்வீக மகிமையின் என்னே ஒரு முன்ருசி! இரட்சிப்பின் சுதந்திரவாளி நான், தேவனால் கிரயம் செய்யப்பட்டவன், அவருடைய ஆவியால் பிறந்தவன், அவருடைய இரத்தத்தில் கழுவப்பட்டவன். 47. அதற்கு அவர், “பில்லி, அது மிகவும் நன்று. ஆனால் அது உன்னை இங்கே கல்லறையில் வைப்பதற்கு உதவாது” என்றார். 48. நான், “அது என்னை வெளியே கொண்டு வந்து விடும். நான்– நான் உள்ளே போவதைக் குறித்து கவலைப் படவில்லை. வெளியே வருவதைக் குறித்துதான் கவலைப் படுகிறேன்” என்றேன். 49. வர்த்தகப் புருஷர்களே, நான் இன்னும் அந்த வர்த்தகத்தில் உள்ளேன். இதைக் குறித்து நீங்கள் பேச விரும்பினால், நான் அதை உங்களுடன் சேர்ந்து செய்ய சந்தோஷமடைவேன். 50. ஆனால், ஐக்கியத்தை பெற்றிருப்பது ஒரு மகத்தான காரியம்.. இது வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நம்புகிறேன். “சகோதரர்கள் ஒருமித்து வாசம் செய்வது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது! அது ஆரோனின் தாடியில் வடிகிறதும், அவனது அங்கிகளில் இறங்குகிறதுமான அபிஷேக தைலத்திற்கு ஒப்பாய் இருக்கிறது.” அங்கே ஐக்கியத்தைக் குறித்ததான ஏதோ ஒரு காரியம் உள்ளது. 51. ஆதியிலே தேவன் தனிமையாய் இருந்தார். அவர் தேவனாக மட்டும் இருந்தார்... ஆதியிலே, அவர் தேவனாகக் கூட இல்லை, அது உங்களுக்குத் தெரியுமா? அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தேவன் என்றால், “தொழுகைக் குரியவர்” – ஆங்கிலத்தில். பாருங்கள்! அவர் ஏலோஹிம் ஆக இருந்தார், தாமாகவே இருக்கிற ஒருவர். அவர் தேவனாகக் கூட இல்லை. உங்களுக்குள் எண்ணங்கள் இருப்பதைப் போல அவருக்குள் தன்மைகள் இருந்தன. பாருங்கள்! உங்கள் எண்ணங்கள், நான் ஏதோ ஒன்றை பார்க்கவேண்டும்; பிறகு... நான் அதை நினைத்து பார்த்து, பின்னர் பேசுகிறேன். ஒரு எண்ணத்தின் வெளிப் பாடு தான் ஒரு வார்த்தை என்பது. ஆகவே, “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை வெளிப்படுத்தபட்டது.” பாருங்கள்! கொண்டுவரப்பட்டது. 52. இப்பொழுது, எல்லாமே ஒன்று தான். நாம் மறுபடியும் பிறந்தவர்களாக இருப்பதால் நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறோம். நமக்கு நித்தியஜீவன் உண்டென்றால், அங்கே ஒரே ஒரு வகையான நித்திய ஜீவன் தான் உண்டு, அதுதான் தேவன். நாம் அவருடைய தன்மைகளாய் இருக்கிறோம். நான் இப்போது கிறிஸ்தவர் களின் மத்தியில் இவ்விதமாக பேச முடியும். நாம் தன்மைகளாக இருக்கிறோம். இயேசு ஒரு மீட்பராக வந்தார். எத்தனை பேர் இதை விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் “ஆமென்” என்கின்றனர்.) மீட்பு என்பது ஏதோ ஒன்றை புதிதாக உருவாக்குவதில்லை. மீட்பு என்பது, ஏற்கனவே இருந்ததை மீண்டும் கொண்டு வருவது ஆகும். பாருங்கள்! ஆகவே எதைக்குறித்து நீங்கள் பயப்படுகிறீர்கள்? பாருங்கள். இது எல்லாமுமே-இது எல்லாமுமே அவரு டைய கையில் உள்ளது. கடிகாரமானது தவறாக இயங்க வில்லை. எல்லா விஷயங்களுமே இந்த வழியில் தான் இருக்க வேண்டியுள்ளது. அது நம்மை இப்போது இந்த இடத்திற்கு கொண்டு வருகிறது. 53. இப்பொழுது, இந்த காலை வேளையில் இங்கே இருக்கிற, இந்த அருமையான ஐக்கியத்தின் அங்கத்தினர் அல்லாத நீங்கள் ஒவ்வொருவரும், இங்கே உள்ள இந்த அருமையான நபரோடு இதை பேசுவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நான் அவருடன் கரம் குலுக்க வேண்டியவனாயிருக்கிறேன், அவர்தான் இந்த அமைப்பின் தலைவர். நீங்கள் உங்களை பெலப்படுத்தி கொள்ளுங்கள்; தாவீது தம் எதிராளிக்கு எதிராக தன்னை பெலப்படுத்திக் கொண்டதாகக் கூறினான். அதுபோல நீங்களும் – நீங்கள்–நீங்கள்- நீங்கள் எதிராளிக்கெதிராக உங்களை பலப்படுத்திக் கொள்வதற்கு உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்யவேண்டியிருக்கிறது. நாங்கள் பூரண சுவிசேஷ சகோதரர்களாக இங்கே இருக்கிறோம். பாருங்கள். நாங்கள் இதை நம்புகிறோம். நாம் சேர்ந்து வேலை செய்யலாம், வெளியே சென்று, இந்த மற்ற சில சகோதரர்களை சேர்த்துக்கொண்டு அவர்களை உள்ளே கொண்டுவந்து, அது முழு சுவிசேஷத்தை சார்ந்தவராயினும் அல்லது அது இல்லாவிடினும், நம்முடைய - நம்முடைய (ஜெப) கூட்டத் திற்கு அவர்களை அழைத்து வருவோம். ஆகவே ஜெபியுங்கள், கிறிஸ்துவின் சரீரத்தை பெலப்படுத்துவதற்கு நம்முடைய பங்கை நாம் செய்வோம். அதில் நாம் நம்மை பெலப்படுத்தி கொள்வோம். தேவன் உங்களோடு இருப் பார், உதவி செய்வார். எந்த நேரத்திலும் என்னால் உங்க ளுக்கு உதவிசெய்ய முடியும்; எனக்குத் தெரியப்படுத்துங் கள். நாம் இப்போது வார்த்தையை அணுகுவதற்கு முன்பு... 54. நான் உங்களை இங்கே அதிகநேரம் பிடித்துவைக்க விரும்பவில்லை. நான் – நான் - வெறுமனே... சிறிது நேரத்திற்கு முன்பு நான் சொன்னது போல, நான் ஒரு விதமாக - மெதுவாக உள்ளேன். உங்களுக்குத் தெரியும்... நான் அதை ஒருவிதமாக மெதுவாக சிந்திக்க வேண்டிய வனாயிருக்கிறேன். அப்படியே ஆரம்பிப்பதற்கு என்னு டைய சிந்தை அவ்வளவு சிறப்பானது இல்லை, எனவே தொடங்குவதற்கு நான் சற்று நேரம் எடுத்துக்கொள்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டும் என்று அவர் என்னிடம் கூறுகிறாரோ அதைத்தவிர வேறு ஏதும் தெரியாது. ஆகவே சில நேரங்களில் நான் தொல்லைக்குள்ளாகிறேன், அது வரை மற்ற காரியங்களை பேச தள்ளப்படுகிறேன். ஆகவே நான், வெறுமனே... அவர் என்ன சொல்கிறாரோ, அதையே சொல்கிறேன். நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பு, ஆக்கியோனை அணுகுவோம். 55. சிலநாட்களுக்கு முன்பு, நான், புகழ்வாய்ந்த மற்றும் தேவத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற, உங்களில் அநேகருக்குத் தெரிந்த வில்லியம் பூத் க்ளிபோர்ன் (William Booth Clibborn) என்னும் ஒருவரோடு பயணம் செய்து கொண்டிருந்தேன். அவர் சுவிசேஷத்தை ஏழு மொழிகளில் பிரசங்கிக்கிறவர். நாங்கள் தேவனைப் பற்றியும், அவருடைய தன்மைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நான் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந் தேன். நான், “தேவன் ஒரு வைரத்தைப் போன்றவர்” என்றேன். பாருங்கள்? நான் மேலும், “நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் இத்தகைய வரங்கள் – இவைகள் - இவை கள் தேவனுடைய அன்பின் பிரதிபலிப்புகளே” என்று கூறி, மேலும் “ஆப்பிரிக்காவில் நாம் இருந்தது போல...” என்றேன். 56. கிம்பர்லேயிலுள்ள (Kimberley) சுரங்கத்தின் தலைமை அதிகாரி, ஜெபவரிசையின் உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் கிம்பர்லேயிலுள்ள வைர சுரங்கத்தினூடாக என்னைக் கூட்டிச் சென்றார். ஏன்? வீதிகளில் அவை கிடப்பதை உங்களால் காண முடியும். ஆனால் அது வெட்டப்படாதவரை, ஒன்றைக் கூட வைத்துக்கொள்ள நீங்கள் துணிய மாட்டீர்கள். அது முறைப் படுத்தப்பட வெட்டப்பட்டே ஆகவேண்டும். ஆகவே ஒரு மிகப்பெரிய வைரமானது, நீங்கள் அதை கண்டுபிடிக்கும் பொழுது அது தன்னகத்தே அக்கினியை கொண்டிருக்காது. அது கொண்டிருக்காது. அதற்காக அது வெட்டப்பட்டே ஆகவேண்டும். 57. அது தேவனே. நம்முடைய அக்கிரமங்களுக்காக அவர் காயப்பட வேண்டியிருந்தது. நம்முடைய மீறுதல் களின் நிமித்தம் நொறுக்கப்பட வேண்டியிருந்தது. அவரே அந்த பெரிய வைரம் (Big Diamond). நீங்கள் ஒரு வைரத்தை வெட்டும்போது (நீங்கள் எப்போதாவது அதை கவனித்திருக்கிறீர்களா?) மூன்று மூலைகளுள்ள வடிவில் வெட்டுவார்கள், அப்போது சூரியன் அதற்கெதிராக படும்போது, அது ஏழு நிறங்களை பிரதிபலிக்கும். பாருங்கள்! சிவப்பினூடாக சிவப்பை பார்க்கும்போது, வெண்மையாக தெரியும். அது உங்களுக்குத் தெரியுமா? அது சரியே. சிவப்பினூடாக சிவப்பு, அதுதான் இரத்தம். சிவப்பு இரத்தம்... நோக்கிப்பார்க்கிறது... தேவன் ஒரு சிவப்புப் பாவியை, சிவப்பு இரத்தத்தினூடாக பார்க்கையில், அவனை வெண்மையாக மாற்றுகிறது. அவர் இருதயத் திற்குள் இருக்கிறார், நீங்கள் பாருங்கள். 58. மேலும், மேலும், ஆகவே இப்போது, அதில், நான் இவ்வாறு அவரிடம் கூறினேன்: “இந்த ஒளிக்கதிர்களில் பிரதிபலிக்கும்படியாக, தேவன் பிளக்கப்பட்டார், வெட்டப் பட்டார், நொறுக்கப்பட்டார். அது தேவனுடைய மகத்தான வார்த்தையில் படும்போது, தேவன் என்னவாயிருக்கிறார் என்பதை பிரதிபலிக்கிறது.” 59. அப்பொழுது அந்த திரு.க்ளிப்பார்ன் (Mr.Clibborn) “ஆனால் உங்களுக்கு உங்கள் வேதாகமத்தைப் பற்றித் தெரியவில்லை” என்று கூறினார். 60. அதற்கு நான், “அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் ஆக்கியோனை நன்றாக அறிவேன். ஆகவே அதுதான்- அதுதான் முக்கியமான விஷயம். ஆக்கியோனை தெரிந்துக்கொள்ளுதல்” என்றேன். அவரை அறிவதற்கு, உங்களுக்கு எல்லா வார்த்தையும் தெரியுமா தெரியாதா? என்பதல்ல; ஆனால் வெறுமனே அவரைத் அறிந்துக்கொள்ளுதல்! 61. ஒரு முறை, அது ஹட்சன் டெய்லர் (Hudson Taylor) என்று நான் நம்புகிறேன், ஒருமுறை ஒரு வாலிப ஊழியரிடம் சொன்னார், “திரு.டெய்லர் அவர்களே, நான் சமீபத்தில்தான் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளேன். நான் போய் கலையியலில் இளங்கலை (பட்டம்) பெற்றுக் கொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்கு அவர், “மெழுகுவர்த்தி பாதி எரிந்துவிழும் நிலையில் வெளிச் சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முயற்சி செய்யாதீர். அது எரிந்துக் கொண்டிருக்கும்போதே, அது ஒளி கொடுத்துப் பிரகாசிக்கும்படி செய்யுங்கள்” என்றார். சரி. வேறு வார்த்தையில் கூறவேண்டுமானால், என்ன சொல்வது என்று உமக்குத் தெரியாவிட்டால், போய், அது எப்படி பற்ற வைக்கப்பட்டது என்று சொல்லுங்கள். அதுவே போது மானது. 62. மேலும், முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களாகிய நீங்களும் அதையே செய்கிறீர்கள். ஒரு ஊழியக்காரர் ஆவதற்கு, நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அவர் உங்களுக்கு ஏற்கனவே எதைச் செய்தாரோ, வெறுமனே அதை சாட்சி பகருங்கள். நீங்கள் இங்கே ஒன்றாக கூடி வந்திருக்கின்றதான காரியம் என்னவென்றால், அவர் உங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை நீங்கள் சாட்சி பகருதல் ஆகும். மற்றவர்களும் பற்ற வைக்கப்படும் படி, அது வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்கிறது. அவ்வா றாகத்தான் கூடாரத்திலிருக்கிற விளக்குகள் ஒன்றிலிருந்து ஒன்று பற்ற வைக்கப்படுகிறது. அது அந்நிய ஒளியோ, புதிய ஒளியோ அல்ல; ஆனால் அதே ஒளி. அதாவது, காலங்கள்தோறும் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்கிற அதே தேவன். இப்போது நாம் நம் தலைகளைத் தாழ்த்தி, இந்த மகத்தான ஆக்கியோனிடம் பேசுவோமாக. 63. பரலோகப் பிதாவே, இப்பொழுது உன்னதங்களில் கூடி வருதல்: இதை, ஒரு சபை கட்டிடமாக நாங்கள் உணரவில்லை. சந்தேகமில்லை, ஆனால் கிவானியர் மற்றும் அநேக வேறுபட்ட அமைப்புகள் அரிமா அமைப் புகள் மற்றும் எல்லாம் இங்கே சந்திக்கின்றன. ஆனால் இந்தக் காலையில் இது ஒரு சபையாகும், ஏனென்றல் இராஜ்ஜியத்தின் பிரதிநிதிகள் ஒன்றுகூடியுள்ளனர். மேலும், ஏற்கனவே இங்கு சொல்லப்பட்ட சாட்சிகள் மற்றும் துதி பாடல்கள் மூலமாக அந்த மகத்தான இராஜாவின் பிரசன்னத்தை உணருகிறோம். அவர் இங்கே இருக்கிறார் என்பதை நாங்கள் அறிகிறோம். 64. இப்பொழுது நாங்கள், பிள்ளைகளாக உமக்கு எங்கள் உதடுகளின் துதிகளை சமர்ப்பிக்கையில், ஓ! அது ஒரு ஒழுங்கின்படி இல்லாதிருக்கலாம், ஆனால் வெறுமனே பிள்ளைகளாய் இருக்கிறார்கள், கர்த்தாவே, நீர் அதைப் புரிந்துக் கொள்கிறீர். நாங்கள் எங்கள் முறைமைகள் மற்றும் அறிவை எவ்வளவாக உபயோகப்படுத்த முயற்சி செய் தாலும், அது ஒரு பொருட்டல்ல. அது இருதயத்திலிருந்து வராததாய் இருக்கும், அது ஏதோ செயற்கையானதாக இருக்கும். ஆனால், எங்கள் இருதயத்தில் இருந்து நாங்கள் உமக்கு ஆராதனைகளை சமர்ப்பிக்கும் போது, அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நிச்சயித்திருக்கிறேன். 65. இப்பொழுது, எங்கள் இருதயங்களை ஒன்றுசேர்த்து, பரிசுத்த ஆவியென்னும் கயிற்றினால் எங்களை கட்டும் படிக்கும், தேவனுடைய வார்த்தையின் மூலம் எங்களிடம் பேசும்படிக்கும் ஜெபிக்கிறோம். 66. இந்தச் சிறு அமைப்பை ஆசீர்வதியும் கர்த்தாவே, இதற்கு பெலத்தைக் கொடும். “கர்த்தராகிய நான் இதை நட்டியிருக்கிறேன், நானே இரவும் பகலும் நீர் பாய்ச்சு வேன்; என் கையிலிருந்து ஒருவரும் அதை பறிக்க முடியாது.” கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனாக நான் ஜெபிக்கிறேன். இவர்களை ஆசீர்வதியும். கர்த்தாவே, உம்முடைய இராஜ்ஜியத்திற்காக இவர்களைப் பெலப் படுத்தும். 67. இந்தக் காலைவேளையிலே, இங்கே பிரதிநிதித்து வமாகி இருக்கும் ஒவ்வொரு சபையையும், ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதியும். இங்கே, இக்காலையில், மெய்யா கவே இரட்சிக்கப்படாமல் யாராவது இருப்பார்களேயா னால், தேவனே, அவர்கள் மரணத்தை சந்திக்க போதுமானவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டுகொள்ளத்தக்கதான மணிவேளை இது வாக இருக்கட்டும், அவர்கள் உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நித்திய ஜீவனின் வரத்தைப் பெற்று கொள்ள வேண்டும் என்று நான் – நான் ஜெபிக் கிறேன். இதை அவருடைய நாமத்தில் நாங்கள் கேட் கிறோம், ஆமென். 68. இப்பொழுது, கூட்டங்களில் நான் உங்களிடம் மிகவும் கடினமாக பிரசங்கித்திருக்கிறேன் என்று நினைக் கிறேன். ஒரு பிரசங்கத்தை பிரசங்கிக்க விரும்பவில்லை. இருப்பினும், இங்கே வார்த்தையை வாசிக்காமலும் அந்த வார்த்தையின் பேரில் சிறிதளவாயினும் பேசாமலும் ஒரு கூடுகை கூடுவது உண்மையிலேயே சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆகவே இங்கே நான் வார்த்தை யிலிருந்து, வெறுமனே ஒரு - ஒரு நாடகம், ஒரு சிறிய கதை இவற்றை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அதை உங்களில் சிலருக்கு, இரண்டு அல்லது மூன்று முறை பிரசங்கித்திருக்கிறேன். ஆனால் மீண்டும் அதையே பிரசங்கிக்கப்போகிறேன் என்று நினைக்கிறேன், நீங்கள் அதை என்னோடு கொஞ்சம் பொறுத்துக்கொள்வீர்கள். 69. நான், பரிசுத்த லூக்காவின் புத்தகம், 19-வது அதிகாரம் 1-ஆம் வசனத்திலிருந்து தொடங்கி வாசிக்கப் போகிறேன். இதை போன்ற இடத்தில் அதை பிரசங்கிப்பது என்பது ஒரு மிகவும் வினோதமான சிறிய பாடப் பொருளா யிருக்கிறது. இருப்பினும் எல்லா வார்த்தையும் ஊக்குவிக் கப்பட்டதாய் இருக்கிறது, அதின் ஸ்தானத்தில் பொருந்து கிறது. மேலும் இந்தக் காலையில், தேவன் இந்த வார்த் தையை எடுத்து, சரியாகப் பொருந்தக்கூடிய இடத்தில் அதை பொருத்துவார் என்று நான் நம்புகிறேன். ...இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ...ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானு மாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படி - எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். 70. மீண்டும் நான் அதை வாசிக்கட்டும்; ஏனெனில் இதை வலியுறுத்த விரும்புகிறேன். இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக் கூடாமல், அவர் போகும்படி இருந்த வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். 71. வாசித்த அவருடைய இந்த வார்த்தையோடு கர்த்தர் தாமே அவரது ஆசீர்வாதங்களைக் கூட்டுவராக. 72. இந்த மனிதன், குள்ளமான பாத்திரம், நமது காட்சி எரிகோவில் ஆரம்பமாகிறது. இப்பொழுது, எரிகோ, பாலஸ்தீன தேசத்திலே மிகவும் தாழ்வான ஒரு பட்டணம்; மேலும் இது பள்ளத்தாக்கில் உள்ளது. எருசலேமோ, உயரத்தில், மலையின் மேல், ஒரு குன்றின் மேல் உள்ளது. 73. நீங்கள் கவனித்திருந்தீர்களானால் அவர், இயேசு பூமிக்கு வந்தபோது, மனிதர்கள் நடுவில், எவ்வளவு கீழ்த்தரமான பெயர் கொடுக்க முடியுமோ, அது அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் வந்தபோது அவர் “பெயல்செபூல்” (Beelzebub) என்ற அந்த மிகவும் மோசமான பெயரில் அவர்கள் அவரை அழைத்தனர். அதாவது, அது, “ஒரு பிசாசு, ஒரு குறிசொல்லுபவன், அசுத்த ஆவி,” என்பதாகும். அவர்கள் அவருடைய கிரியைகளை ஒரு அசுத்த ஆவி என்று அழைத்தனர். ஆயத்தமாகாத சபை, அவரை சந்திக்கையில், அவர்கள் அவருக்கு “பெயல்செபூல்” என்ற பயங்கரமான பெயரை கொடுத்தனர். 74. இந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க ஒரு இடம் கூட கிடைக்காத ஒரு ஏழை விவசாயத் தாய்க்கு (peasant mother) பிறக்கக்கூடியதிலேயே மிக மிக எளிமையான பிறப்பில் அவர் வந்தார். குழந்தைக்கு சுற்றப்படும் துணி, அது எருதுவின் நுகத்தடிக்கு பயன்படுத்தப்பட்ட கந்தை துணி என்று நமக்கு கூறப்பட்டுள்ளது, மாட்டுத் தொழுவத்திலே, நாற்றமெடுத்த கொட்டகையில், அந்தக் கொட்டகையின் சாணத்தின் அல்லது கழிவுகளுக்கு மேலாக அவரை சுற்றி வைத்தனர். அந்தக் கொட்டகை கூட சரியான விதத்திலான கொட்டகை அல்ல, குன்றின் பக்கத்திலிருந்த ஒரு சிறு குகையாக இருந்தது. 75. மேலும் அவர் கீழான, மிகவும் ஏழையான ஜனங்க ளோடு இடைபட்டார். சமுதாயத்தின் உயர்ந்த அந்தஸ்துள்ள வர்களால் அவர் புறக்கணிக்கப்பட்டார். தமக்கு சொந்த மானவர்களாலேயே அவர் புறக்கணிக்கப்பட்டார். சபை யானது அவரை அறிந்திருக்க வேண்டியதாய் இருந்தது, ஆனால் அவர்களோ அவரை அறியவில்லை. அவரைத் அறிந்து கொள்ளும்படி வார்த்தையில் அவர்கள் பயிற்று விக்கப்படவில்லை. 76. அவர் மிகவும் தாழ்வான பட்டணமான பாலஸ்தீனா விலுள்ள எரிகோவுக்குச் சென்றார் என்று நாம் மீண்டுமாக காண்கிறோம். அது கடல் மட்டத்திற்குக் கீழ் எத்தனை அடி தாழ்வாக இருக்கிறது என்பதை மறந்துவிட்டேன். அந்தப் பட்டணத்திலேயே உள்ள சிறியமனிதன், அந்த மரத்தின் மீது ஏறி, அவரை கீழே குனிந்துப் பார்க்கும் வரைக்குமாக, அவர் தம்மைத் தாழ்த்தினார். 77. ஆனால் உலகம் அவரை அப்படியாகத்தான் நினைத்தது, அவர்கள் அவருக்கு, மிகவும் கொடுமையான, மிகவும் கடினமான மரணத்தை, எந்த மனிதனும் அவ்வாறு இறக்கமுடியாத ஒரு மரணத்தைக் கொடுத்தனர். அவர் ஒரு பாதகன் போல மரித்தார். அவர் மரிக்கக் கூடியதிலேயே மிகவும் அவமானமான ஒரு நிலையானது, அவர்கள் அவரது ஆடைகளை உரிந்துப்போட்டனர்; நிச்சயமாக. நீங்கள் சிலைகளில், மற்ற படங்கள் முதலானவற்றில் அவரைச் சுற்றி ஒரு துணி இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரோ அவமானத்தை உணர்ந்தார். அவர்கள் அவரது ஆடைகளை முழுமையாகவே அவரிடமிருந்து உரிந்து விட்டனர்; நிர்வாணமாக சிலுவையோடு ஆணி அறைந்தனர். கொடுக்கக் கூடியதிலேயே மிகவும் கீழ்த்தரமானதும், மிகவும் கடினமானதுமாகிய ஒரு மரணத்தை அவர்கள் அவருக்குக் கொடுத்தனர். உலகமும் அவ்வாறாகத்தான் அவரைக் குறித்து எண்ணம் கொண்டிருந்தது. 78. ஆனால் தேவனோ, பரலோகத்திலும், பூமியிலும் பெயரிடப்பட்ட ஒவ்வொரு நாமத்துக்கும் மேலான ஒரு நாமத்தை அவருக்கு தந்தருளும்படியாக அவரைக் குறித்து எண்ணம் கொண்டிருந்தார். அவருடைய சிங்காசனம் அவ்வளவு உயரமாக அதாவது வானத்தையே கீழ் நோக்கி அவர் பார்க்க வேண்டும் என்கிற அளவிற்கு அவரை உயர்த்தினார். அது தான் அவரைக் குறித்ததான தேவனுடைய சிந்தையாய் இருந்தது. நமது சிந்தையும் அவ்வாறாகவே இருக்குமென்று இந்தக் காலையில் நான் உறுதி கொள்கிறேன். இது எல்லா நாமத்துக்கும் மேலானது; பெயரிடப்படும் ஒவ்வொரு நாமத்தையும் விட மேலானது; பரலோகிலும் பூலோகிலும் உள்ள முழு குடும்பத்திலும் கூட “இயேசு” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாமத்தினால், ஒவ்வொரு - ஒவ்வொரு முழங்காலும் முடங்கும், ஒவ்வொரு நாவும் அதை அறிக்கைச்செய்யும். 79. சகேயு, எரிகோ பட்டணத்தில் ஒரு–ஒரு வியாபாரி யாய் இருந்தான். சந்தேகமின்றி அவன் தன்னுடைய பாதையில் ஒரு நல்ல மனிதனாக இருந்தான். அவன்- அவன்... நான் நம்புகிறேன், அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான் என்று நாம் சொல்லலாம். அவன், அந்நாட்களில் இருந்த ஸ்தாபன சபைகளில் ஏதோ ஒன்றைச் சார்ந்தவனாக நிச்சயம் இருந்திருக்கக்கூடும். அவன் ஒரு பரிசேயனாக இருந்தான் என்று நாம் வைத்துக்கொள்வோம். 80. மேலும் அவன், உண்மையாகவே தனது மனைவியின் கருத்துகளினூடாக செல்லவில்லை. அவன் மனைவியின் பெயர் ரெபேக்காள் என்று வைத்துக் கொள்வோம். அவன் அவள் கருத்துக்களோடு ஒத்துப்போகவில்லை. ஏனெனில் அவள் இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருந்தாள். அவள் அவரை அவர் என்னவாக இருந்தாரோ, அதாவது அவர் தான் மேசியா என்று விசுவாசித்தாள். ஏனெனில், அவள் மேசியாவின் அடையாளங்களை அவர் செய்வதை பார்த்திருக்கிறாள். அவள், ஒரு எபிரேய பெண்மணி. எபிரேயர் அடையாளங்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை கவனிப்பர். ஏனெனில் அது அவர்கள் தூதனாக இருக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக அவரை தெரிந்து கொள்வதில் ஒருபோதும் அவர்கள் தவறவில்லை. ஏனெனில் அவர் “மனுஷகுமாரனாக” வந்திருந்தார். 81. இங்கே மீதமுள்ள, சகேயு தொடர்பான சில காரியங்களை படியுங்கள். “மனுஷகுமாரன் இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே வந்திருக்கிறார். இவனும் ஆபிரகாமின் குமாரனாயிருக்கிறான்.” 82. அவர் பாவிகளோடு சென்றபோது அவரைக் குற்றப் படுத்தினார்கள். ஆகவே அதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நாம் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. அவர்களுக்கு அவர்களது மதக்கோட்பாடு இருந்தது. நல்ல வாழ்க்கை நடத்தவும் அருமையான ஜனங்களாயிருப்பதற்கும் மற்ற பிறவற்றிற்கும் அது இருந்தது. ஆனால் உண்மையில் அவர்களுடைய மேசியா எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. 83. அது மீண்டும் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வேறுவிதமாக அதை தவறாக புரிந்து கொள்ளும் காரியமானது, மிக எளிதில் சம்பவிக்கும். இப்போது அதை நிச்சயப்படுத்த, ஒரே ஒரு வழிதான் உண்டு. அது, அவர் யார் என்பதை கண்டறிதலே ஆகும். வேதாகமம் கூறுகிறது, “அவர் மாறாதவராயிருக்கிறார்.” கடைசிக்காலத்தில் அவர் தம்மை எப்படி ரூபகாரப்படுத்துவார் என்பதை கண்டறி யுங்கள். இது எழுதப்பட்டுள்ளது. பாருங்கள், முதலில் வெளிப்படுத்தாமல், அவர் ஒருபோதும் எதையும் செய்வதில்லை. வேதத்தில் அவர் அவ்வாறு கூறியுள்ளார். “தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தாமல் அவர் எதையும் செய்வதில்லை.” அதை அவர் வெளிப்படுத்தியும் உள்ளார். மேலும் இவர் அவருடைய தீர்க்கதரிசி. இது ஒரு தீர்க்கதரிசன புத்தகம். எல்லா வழிகளிலும் இதுவே முழுமையான இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தலாய் உள்ளது. இதனோடு எதையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது. மேலும் நாம் இதை தேடிப்பார்த்து, எந்த நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் நாமும் ஒருவேளை அதே கண்ணியில் சிக்க நேரிடலாம். 84. ஆகவே இந்த நேரத்தில் இதை காண்கிறோம். இந்த சகேயு, நமது சிறிய கதாபாத்திரம், இந்தக் காலையில், இந்த எரிகோ வியாபாரியானவன், நாம்... அவன் கிவானியர்களை சேர்ந்தவனாக இருக்கக்கூடும், அப்படியொரு விஷயம் இருக்குமானால், அல்லது அதை உருவகப்படுத்துகின்ற ஏதோ ஒன்றை சேர்ந்தவனாக இருக்க லாம். அவன் - அவன் அங்கே எரிகோவில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பெரிய அமைப்பின் அங்கத் தினனாக இருந்திருக்கலாம். சந்தேகமில்லை, அவனது - அவனது காலத்தில், அவன் ஒரு சிறந்த மனிதனாக இருந்தான், மேலும் அவன் ஒரு சபையை சார்ந்தவனாக இருந்தான். 85. ஆனால் நாம் கண்ட மோசமான காரியம் என்ன வெனில், அவன் இயேசுவை குறித்ததான நவீன கருத்துக்கள், பரவலான கருத்துக்களின் பக்கமாக சார்ந் திருந்தான். ஆனால், இயேசு வார்த்தையாய் இருக்கிறார். அந்த வார்த்தையின் ரூபகாரப்படுதல்தான் இயேசு. பாருங்கள்! மேலும் அவரைப் பற்றிய பிரபலமான கருத்துக்களை அவன் எடுத்துக்கொண்டான், அதாவது அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல, அவர் வெறுமனே ஒரு-ஒரு- ஒரு… இந்த வார்த்தையை நான் சொல்ல விரும்பவில்லை, இன்றைய நாட்களில் நாம் சொல்வதைப்போல, தவறாக உரிமைகோருபவன் (four-flusher), வெறுமனே ஏதோவொரு வேடிக்கை போன்றவை. 86. ஆனால் நீங்கள் பாருங்கள், சாத்தானால் ஆள் மாறாட்டம் செய்யமுடியும். எது சரி எது தவறு என்று தெரிந்துக் கொள்ளவே மிகவும் கடினமாக இருக்கும் அளவுக்கு அதை அவ்வளவு சரியாக செய்வான். இப்படியாகத்தான் கடைசி நாட்களில் இருக்கும் என்று இயேசு கூறினார். யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல, அதிகப்படியான ஆள்மாறாட்டம் அல்லது பாசாங்கு செய்வான். 87. நினைவில் வையுங்கள், அந்த இரண்டு மனிதர் களும், மோசேயும், ஆரோனும் செய்த எதையும் செய்யக் கூடியவர்களாய் இருந்தார்கள். ஆனால் மோசேக்கு தெரிந்த ஒரே காரியம், நிரூபிக்கப்பட்ட ஒரு… யந்நேயும், யம்பிரேயும் அடிமைகளை விடுவிக்க வரவில்லை. ஆனால் கர்த்தரின் நாமத்தில் மோசே அவர்களை விடுவிக்க வந்தான். பாருங்கள், ஏனெனில் அது அப்படியாக எழுதப்பட்டுள்ளது. ஆபிரகாமிடம் அவர், “உன்னுடைய சந்ததியார் நானூறு வருடங்கள் பரதேசிகளாய் இருப்பார்கள். ஆனால் நான் அவர்களை விடுவிப்பேன்” என்றார். ஆகவே மோசேயிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது இருந்தது. ஆனால் அவர்கள் உருவாக்குகிற எந்தவிதமான வரத்தையும், இவர்களால் பாவனை செய்யக் கூடும். அவர்கள் அதை அறிந்தவர்களாய், தங்களை பாவனை செய்பவர்களிடம் எந்தவித கவனத்தையும் செலுத்தாமல், அவர்கள் வார்த்தையோடு மிகச் சரியாகத் தரித்திருந்தனர். இறுதியில் தேவன் உறுதிப்படுத்தினார். 88. மேலும் உங்களுக்குத் தெரியுமா, அவர், “இவை கடைசி நாட்களில் சம்பவிக்கும்” என்றார். “யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல, துர்புத்தியுள்ள இந்த மனிதர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பார்கள்.” அது சரிதான். பாருங்கள், வெறுமனே ஆள்மாறாட்டங்கள். ஆகவே, இது சற்று குழப்பத்தை ஜனங்களுக்குக் கொடுக்கிறது. 89. சில நேரங்களில் நீங்கள் அவர்களை திட்டலாம். ஆனால், அப்படியிருந்தும் அது – அது, நீங்கள் அவர்களை விரும்பவில்லை என்பதால் அல்ல, அது நீங்கள் அவர்களை விரும்புவதால்தான். 90. நீங்கள் இப்படிருந்தால் என்ன, உங்களுடைய சிறு பையன் வெளியே, வீதியின் நடுவில் உட்கார்ந்துக் கொண்டிருந்தால், நீங்கள் வெளியே போய், “செல்லமே, குட்டிப்பையா, நீ இங்கே உட்காரக் கூடாது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினால் அது எப்படியாயிருக்கும். அப்பொழுது அவன், “போய் உங்கள் வேலையை பாருங்கள்” என்பான். நீங்கள் அவனுக்கு சிறிய... அதை என்னவென்று நீங்கள் அழைப்பீர்கள், என் தந்தை எனக்கு கொடுப்பதைப்போல? பாஸ்டீரியர் ப்ரோடோப்ளாஸ்ம் ஸ்டிமு லேசன். அது சரியான விதமா? ஜசபையார் சிரிக்கின்றனர் – த.ஆ.ஸ அந்த விதமாகத்தான் அது உச்சரிக்கப்பட வேண்டுமா? (A posterior protoplasm stimulation – அவனை பின்புறமாக அடித்து கிளப்பி விடுவது – த.ஆ.) அதுதான் அவனுக்குத் தேவை. 91. ஆகவே, அப்படித்தானே சில நேரங்களில் சபைக்கும் நீங்கள் அவ்வாறு கொடுக்க வேண்டியுள்ளது; இது உங்களுக்கு பிள்ளையை பிடிக்கவில்லை என்பதால் அல்ல. ஆனால் நீங்கள் பிள்ளையை நேசிக்கிறீர்கள் என்பதால்தான். பாருங்கள்! அன்பு திருத்துகிறதாயிருக்கிறது. 92. அவ்வாறே, இயேசு அவர்களோடு தீங்காக இருக்க வில்லை. அவர்களை அவர் நேசித்தார். அவர் அவர்களை திருத்தியே ஆகவேண்டும். 93. ஆகவே, நாம் இந்த சிறு மனிதனையும் அவன் மனைவி ரெபேக்காளையும் காண்கிறோம். அவள் அவரை அவர் ஒரு தீர்க்கதரிசியாக… அவரே அந்த தீர்க்கதரிசி என்று விசுவாசித்தாள். நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. அடுத்து காட்சியில் வரக்கூடிய, அடுத்த உண்மையான தீர்க்கதரிசி அவராகத் தான் இருப்பார் என்று அவர்களுக்குத் தெரியும். பாருங்கள், தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டது வந்துவிட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே தீர்க்கதரிசிகள் நிறுத்தப்பட்டு, பின்னர் அவரே (இயேசு) காட்சியில் தோன்றினார். அவள் அந்த மேசியாவின் அடையாளத்தைக் கண்டாள் மற்றும் அது அந்த வார்த்தையே என்பதை அவள் அறிந்திருந்தாள். பாருங்கள், அவள் அதை தேடிக் கண்டடைந்திருந்தாள். 94. ஆகவே நமது நாடகம் இங்கேயிருந்து துவங்கு கிறது. அந்த சிறுமனிதனுக்கு அந்த இரவு ஒரு மோசமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். அது ஒரு அமைதியற்ற இரவாக இருந்திருக்கும், அவனால் தூங்க முடியவில்லை. அவன் இரவு முழுவதும், தலையணையின் மீது படுத்து உருண்டு கொண்டிருந்தான். நம்மில் பலருக்கு அப்பேற்பட்ட இரவுகள் எப்படியிருக்கும் என்பது தெரிந்திருக்கும். 95. நீங்கள் பாருங்கள், ரெபெக்காளுக்குத் தெரிந்தி ருந்தது. அவள் இயேசுவின் சீடர்கள் மற்றும் அவரோடு இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தாள். அடுத்தநாள் காலை, அந்தப் பட்டணத்திற்கு இயேசு வருகிறாரென்று அவள் அறிந்திருந்தாள், மேலும் தன் - தன் கணவருக்காக அதிக ஆர்வம் கொண்டவளாக இருந்தாள். இயேசுவை தன் கணவன் முகமுகமாய் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். ஒரு மனிதன் அவரை முகமுகமாய் எப்போதாகிலும் பார்க்க நேரிட்டால் அது உங்களுக்கு எதோ ஒரு விஷயத்தை செய்யும். அவர் மற்ற மனிதர்களைப்போல் அல்ல. அவர் வித்தியாசமானவர். தான் அவரை கண்டிருப்பதையும், அவரது கிரியைகளை பார்த்திருப்பதையும், அவர்தான் மேசியா என்பதை தான் அறிந்திருக்கிறேன் என்பதையும் அவனுக்கு நிச்சயப்படுத்த விரும்பினாள். இருப்பினும், அங்கிருந்த குருமார்களும் மற்றவர்களும், “அதோடு செய்வதற்கு ஒன்றுமில்லை. இது வெறுமனே போலியான ஒன்று. இது - இது ஒரு மோசடி” என்றனர். ஆனால் அவளோ அதை விசுவாசித்தாள்; ஆகவே அவள் ஜெபம் செய்து கொண்டிருந்தாள். 96. இப்போதும் ரெபேக்காளே, உன்னுடைய வியாபார புருஷன் சகேயுவை, இயேசுவுக்கு முன்பாக நிஜமாகவே கொண்டுவர வேண்டுமானால், நீ ஜெபிக்க ஆரம்பித்துவிடு, அவன் அமைதியற்ற நிலையை பெறுவான். 97. ஆகவே நேரமானது மிக நெருங்கி வந்துவிட்டது. அடுத்த நாள் காலை இயேசு அந்த வழியே கடந்துபோக உள்ளார். ஆகவே இரவு முழுவதும் அவன் படுக்கையில் உருண்டு கொண்டு இருந்தான், பரிதாபமாக காணப்பட்டான். ஆனால் அவள் அங்கேயிருந்து ஜெபித்துக் கொண்டி ருந்தாள். அந்த இரவானது சந்தேகத்திற்கிடமின்றி, அவர்கள் எழுந்திருக்கும்போது நிச்சயமாக அவள், “நன்றி கர்த்தாவே, அவரோடு (என் கணவரோடு) நீர் கிரியை செய்துகொண்டி ருக்கிறீர்” என்று சொல்லுவாள். 98. இப்போது, சகேயுவை நீங்கள் பார்க்கப் போகும் போது, அவன் அமைதியற்ற நிலையில் இருப்பானேயாகில், நீங்கள் வெறுமனே, “கர்த்தாவே, இப்போது நீர் அவரிடம் கிரியை செய்து கொண்டிருக்கிறீர், நன்றி” என்று சொல்லுங்கள். நீங்கள் அவனைப் பார்க்கும் போது அவன் மிகவும் கடுகடுப்பாய், இனிமேல் நீங்கள் சபைக்கு செல்வதை அவன் விரும்பவில்லை என்பதாக, “அந்தக் கூட்டத்திலிருந்து விலகியிரு. அங்கே இனி ஒரு போதும் போகாதே! அங்கே ஒன்றுமேயில்லை” என்று சொல்லும் போது, வெறுமனே பொறுமையை கடைபிடியுங்கள். தேவன் கிரியை செய்துகொண்டிருக்கிறார். பாருங்கள், அந்த விதமாகத்தான் அவர் அதை செய்கிறார் பாருங்கள்! அவன் அமைதியை மிகவும் இழந்து கொண்டிருந்தான். அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 99. ஆகவே, அடுத்தநாள் காலையில் நாம் பார்க் கிறோம், அதிகாலையிலேயே, நமது சிறிய கதாபாத்திரம் படுக்கையிலிருந்து எழுந்துபோய், மிகச் சிறந்த உடையினால் தன்னை அலங்கரித்து, உங்களுக்குத் தெரியுமா?, தன்னிடமிருந்ததிலேயே நல்ல அருமையான அங்கியை அணிந்து கொண்டு, தன் தாடியை நேர்த்தியாக்கி தலை மயிரை வாரிக்கொள்கிறான். ரெபெக்காளும் போர்வையின் அடியில் இருந்துகொண்டு, அவனை எட்டிப் பார்க்கிறாள். ஏதோ வொன்று நடக்கப் போகிறது என்பதை அந்நேரமே அவள் புரிந்துகொண்டாள். அவள் தன்னை பார்க்கிறாளா, அவள் எழுந்து விட்டாளா என்று கவனிக்கிறான். இல்லை. அவன் எண்ணத்தை பொருத்த வரை, அவள் தூக்கத்திலிருந்து எழவில்லை. அவன் திரையை உயர்த்தி வெளியே பார்த்தான்; அப்போது அது விடிகிற நேரமாயிருந்தது. ஆகவே அவன் தன்னை ஆயத்தப்படுத்துகிறான். 100. நீங்கள் பாருங்கள், நீங்கள் யாருக்காவது ஜெபிக்கப் போகும்போது, ஏதோ ஒரு காரியம் நடக்கப் போகிறது. நாம் அங்கேதான் தவறுகிறோம். நண்பர்களே, நாம் ஜெபிப்பதில்லை. ஜெபம் என்பது அடிப்படை ஆதாரம் (Keynote). “கேளுங்கள், அப்பொழுது பெற்றுக் கொள் வீர்கள். நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் நீங்கள் கேட்கவில்லை. நீங்கள் கேட்கவில்லை, ஏனென்றால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி, அதிகமாக கேளுங்கள். கேளுங்கள், நீங்கள் எதைக் கேட்டீர்களோ, அதை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.” பிறகு அதிலே தரித்திருங்கள். அதை விட்டுவிடாதீர்கள். வேதத்தில் அது ஒரு வாக்குத்தத்தமாக இருக்குமானால், அதை தேவன் உங்களுக்கு கொடுப்பார் என்பதாக உங்களுக்கு வெளிப் படுத்தப் பட்டிருக்குமானால், அதிலே தரித்திருங்கள். 101. அந்த விதமாகவே அவளுக்கும் விசுவாசம் இருந்தது. அவளுடைய சகேயு இரட்சிக்கப்படுவான் என்பது அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே அவள் சரியாக அதனோடு உறுதியாயிருந்தாள். 102. அவன் வெளியே கதவண்டைச் செல்லும்போது, அவள் “சகேயுவே, இந்தக் காலை வேளையிலே மிக சீக்கிரமாகவே ஏன் எழுந்துக்கொண்டீர்?” என்று கேட்டாள். 103. அவன், “ஓ! அன்பே, நான் நினைத்தேன், நான் வந்து... ம்... ம்...” என்றான். உங்களுக்குத் தெரியுமா, சமாளிக்க நீங்கள் எல்லாவற்றையும் செய்வீர்கள். ஜசகோ. பிரன்ஹாம் மற்றும் சபையார் சிரிக்கின்றனர் – த.ஆ.ஸ அவன், “நான் வெளியே நடந்துபோய், சுத்தமான காற்றை சுவாசித்து - சுவாசித்து... வரலாம் என்று நினைத்தேன், அது... வந்து... ஒருவித...” என்றான். அதைப் போன்ற மெருகேற்றும் காரியத்தை நீங்கள் செய்வீர்கள். ஆனால் அவளோ ஏதோவொன்றை அறிந்தவளாயிருந்தாள். 104. ஆகவே, இங்கே அவன் வெளியே நடக்கிறான், வீட்டைத் திரும்பிப்பார்க்கிறான். அவன் நடந்துகொண்டே பின்னால் பார்க்கிறான். என்ன நடக்கிறது என்பதைக் காண அவள் ஜன்னலினூடாக எட்டிப்பார்க்கிறாள். அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைக் காண அவள் நோக்கிப் பார்த்தாள். சரியாக அப்பொழுதே அவள் அறிந்து கொண்டாள். அவள் இறங்கிவந்து, “கர்த்தாவே உமக்கு நன்றி. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். அவரை அசைத்துவிட்டோம்” என்றாள். 105. ஆகவே உங்கள் சகேயு இந்தக் காலை வேளை யிலே, ஜெபக்கூட்டத்திற்கு சென்று கொண்டிருப்பாரென்றால், அவனுக்குள் ஒரு அசைவு உண்டாயிருக்கிறது. அவன் ஒருவேளை இங்கு உட்கார்ந்திருக்கலாம். ஆகவே அவன் அசைகிறான். எப்படியோ நாம் இந்த அளவிற்கு அவனை கொண்டு வந்துவிட்டோம். 106. ஆகவே அவன் வெளியே புறப்பட்டுவிட்டான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று திரும்பி, திரும்பிப் பார்த்து செல்கிறான். அவன் “இப்போது நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களுக்குத்தெரியுமா?” என்கிறான். இப்பொழுது நாம் நமது சிந்தையை அவனது சிந்தையாக மாற்றுவோம். “என் மனைவி எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, கலிலேயாவின் தீர்க்கதரிசி என்று எண்ணப்படும் இவரைக்குறித்து குழப்பி கொண்டிருக்கிறாள். என்னுடைய மதகுரு மற்றும் போதகர் என்னிடம், “இந்நாட்களில் அதுபோன்று எதுவுமே இல்லை. இந்த எல்லா அற்புதங்களும், மற்ற காரியங்களும் ஒருவித மோசடிதான். அதில் ஒன்றுமே இல்லை' என்று கூறியுள்ளனர். நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா, நேரே கீழே போய், என்னுடைய கருத்தில் சிலவற்றை அவரிடம் பகிர்வேன். ஏனென்றால், நான் நேருக்குநேராக அவரை அழைத்துப் பேசும்போது, அது இந்தப் பட்டிணத்தில் என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கிவிடும். நிச்சயம் அதைச் செய்வேன். எனவே, அவன் வெளியே போகிறான். 107. “இப்போது தெற்குத்திசை பக்கத்திலிருந்து அவர் நுழைவார். இல்லை, வடதிசையிலிருந்து, எருசலேமிலிருந்து வருகிறார். அவர், தாணில் (Dan) இருந்து பெயர்செபா (Beer-sheba) வரைக்கும் போகிறார் என்பதாக சொல்லப் பட்டது. எனவே நான் – நான் - நான்... அவர் எருசலே மிலிருந்து கீழாக வருகிறார். ஆகவே நான் - நான் அங்கே போய் வடக்கே உள்ள வாசலுக்கு செல்வேன். அவர் உள்ளே வரும்போது நான் அவரைப் பிடித்துவிடுவேன். மேலும் நான் சரியாக அங்கே நிற்பேன், அப்பொழுது அவரை சரியாக கவனிப்பேன். பிறகு நான் அவருக்கு என் கருத்துகளை பகிர்வேன்.” 108. “இது ஒரு பரிசுத்த உருளையர் கூட்டம். இதோடு ஒன்றுமேயில்லை. எப்பொழுதாவது அந்த மனிதனை நான் பிடிக்க நேர்ந்தால், நான் என்னசெய்வேன் தெரியுமா?” என்று இயேசுவைப் பற்றி பேசிக்கொள்கிற, ஓ, எத்தனை சகேயுக்கள் இருக்கிறார்கள்! பாருங்கள்? 109. எனவே அவன் வாசலுக்கு நடந்து செல்கிறான். ஆனால் வினோதமான காரியம் என்னவென்றால், உங்களுக்குத் தெரியுமா? அவன் அவருக்கு வாசலிலேயே சரியாக ஒரு இடத்தைப் பிடிக்கப் போகிறான். அவரிடம் தான் ஒரு வியாபாரி; தான் கிவானியர்கள் (முறையய்ளை) சங்கத்தைச் சேர்ந்தவன்; பட்டிணத்திலே உள்ள சங்கங்கள் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் பொறுப்பானவன் என்றெல்லாம் சொல்ல வேண்டும் என எண்ணியிருந்தான். அவன் அங்கேயிருந்த அதிகாரிகளில் ஒருவன், அவன் ஒரு பிரபலமானவன்; மதிப்பிற்குரியவன்; அவன் ஒரு நாட்டின் நாகரீகமான குடிமகன்; உண்மையில் அவன் அவரிடம் கூறமுற்பட்டது என்னவென்றால், “அவர் அந்தப் பட்டணத் திற்கு வரவேண்டிய அவசியமில்லை, அவர்களுக்கு அநேக பிரசங்கிமார்களும், அநேக சபைகளும் இருக்கின்ற காரணத்தால், அவருடைய கருத்துக்களுக்கு அங்கே சுற்றிலும் அவசியம் இல்லை.” ஆகவே அவன் வீதியில் கர்வத்துடனும் அவனது சிறிய மார்பை வெளியே முன்தள்ளிக்கொண்டும் செல்கிறான். மேலும், ஓ! என்னே! என்ன? ஏன்? இப்படி ஏதாவது அவர்கள் செய்துவிட்டால், அந்த குருவானவர் ஒருவேளை அவனை டீக்கனாக (Deacon) ஆக்கிவிடலாம். ஆகவே அவன் வாசலை நோக்கி செல்கிறான். 110. ஆனால் ஒரு விநோதமான காரியமானது, நல்லது, உங்களுக்குத் தெரியுமா, எப்படியோ அது ஒரு வழக்க மல்லாத காரியம்தான். ஆனாலும் இயேசு காட்சியில் வருகிற எவ்விடங்களிலும் அது அவ்விதம் இருக்கிறது, அதாவது, அவருக்கு செவிகொடுக்கக் கூடிய யாராவது ஒருவர் வழக்கமாக அங்கே இருப்பார்கள். பாருங்கள்! மேலும் அவன் அங்கே செல்வதற்கு முன்பே, அவன்-அவன் ஒரு இரைச்சலை கேட்டான். அவர்கள் எல்லாவித பாடல்களையும் பாடிக்கொண்டிருந்தனர். மேலும், “உன்னதத்தில் தேவனுக்கு மகிமை” போன்ற அருமையான துதிப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். சிலர் உரக்கச் சத்தம் செய்து கொண்டும், கத்திக்கொண்டுமிருந்தனர். இது விநோதமாக இல்லையா? இயேசு எங்கேயோ, அங்கே எப்போதும் அதிகமான ஒரு ஆரவாரம் இருக்கும் அல்லவா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் – த.ஆ.) பாருங்கள்! இது வெறுமனே... 111. அவர் ஆலயத்திற்குள் நுழைந்தார். இல்லை, ஒரு நாள் அவர் எருசலேமிற்குள் நுழைந்தார். அவர் அதைச் செய்தபோது, அவர்கள் குருத்தோலைகளை ஒடித்து, ஆர்ப்பரித்தனர். நின்று கொண்டிருந்த அந்தப் பெரிய சமூகத்தின் விரிவுரையாளர்களும், மற்றவர்களும், குருமார்களும், “அவர்களை அமைதிப்படுத்தும்” என்றனர். 112. இயேசு சொன்னார்: “அவர்கள் சத்தமிடாதிருந்தால், கல்லுகள் உடனே சத்தமிடும்.” பாருங்கள், அருகில் இயேசு இருக்கும் போது, ஏதோவொன்று சத்தமிடத்தான் போகிறது. அது சரி தான். 113. ஆரோன் ஷெகினாவுக்குள் சென்றபோது, ஷெகினா வுக்கு முன்பாக, அவன் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். மேலும் அவனுக்கு, அவன் அங்கியில் மாதுளம் பழமும், மணியும் இருக்கவேண்டியிருந்தது. அவர்கள் இந்தச் சத்தத்தை கேட்கும் போது, அது ஒன்று தான் ஆரோன் இன்னும் உயிரோடு உள்ளான் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதற்கான ஒரே வழியாக இருந்தது. நான் நினைப்பது என்னவெனில், நாம் ஜீவனோடு இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை தேவன் தெரிந்து கொள்ளும் வழி எதுவென்றால், நீங்கள் அந்த சிறிய இரைச்சலை கேட்கும் பொழுதுதான். மரித்துப் போனதாக கருதப்படும் ஏதோவொன்றை, அதற்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்றால், எழுப்பப்பட்ட சத்தத்தினால் மாத்திரமே அது ஜீவனோடு உள்ளதா அல்லது இல்லையா என்பதை அவர்களால் கூற முடிந்தது. 114. ஆகவே, அங்கே கீழே எல்லா சத்தங்களையும் அவன் கேட்டான். அவன் அங்கே சென்றபோது, வாசல் களும் மதிற்சுவர்களும் மற்றும் எல்லாவற்றிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் இவனோ மிகச்சிறிய ஒரு நபராக இருந்தான். ஆகவே அவன், “எப்படி நான் போய் அவரைப் பார்க்க முடியும்? அங்கே அநேக பரிசுத்த உருளைகள் அவரைச் சுற்றிலும் இருப்பார்கள். என்னால் - என்னால் அவரைப் பார்க்க முடியாது. ஆகவே உங்களுக்குத் தெரியும். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது. இங்கே அவரைப் பார்க்கவே முடியாது. ஏனெனில் நான் மிகவும் குள்ளமாக இருக்கிறேன்” என்றான். 115. “ஆனால், எனக்குத் தெரியும், எனது எதிராளியிடம் அவர் தமது மதிய உணவிற்காக செல்லவிருக்கிறார். அவர் ஒரு அறிவாற்றலுள்ள மனிதனாக நான் காணவில்லை, இல்லாவிட்டால் அவர் என்னுடைய வியாபார ஸ்தலத் திற்கு, என்னுடைய உணவகத்திற்கு வந்திருப்பார். ஆனால் அவரோ லாவின்ஸியர் உணவகத்திற்குப் (Lavinskis) போகிறார்.” லாவின்ஸியர் அல்லது, இங்கு லாவின்ஸியர் யாரும் இல்லை என்று நான் நம்புகிறேன். “ஆகவே, எப்படியோ அவர் அவனுடைய உணவகத்திற்குச் செல்கிறார். ஆனால் உண்மையில் நான்தான் சிறந்த உணவை பரிமாறுவேன், மேலும், மேலும், ஏன் இந்த மனிதன்;… ரெபெக்காள் கூட அவரது சபையின் அங்கத்தினராக இருக்கிறாள், அப்படியிருந்தும் அந்த மாதிரி ஒரு இடத்திற்கு அவர் ஏன் செல்கிறார்?” 116. நல்லது, அவன், “எனக்கு ஒரு காரியம் தெரியும். நான் கீழே போகிறேன். மகிமை வீதி அல்லேலூயா அவென்யூவை கடக்கும் இடத்திற்குச் செல்கிறேன். அவர் அந்த இடத்தைக் கடந்துச் செல்வார்” என்றான். அது உண்மைதான். “அல்லேலூயா அவென்யூவும் மகிமை வீதியும் கடக்கு மிடத்தில், சரியாக அங்கே, நகரத்தின் வீதியிலே.” சரியாக அங்கே அவரை நீங்கள் எப்போதும் காணமுடியும். 117. ஆகவே அவன் அந்த ஜனக்கூட்டத்தை விட்டு கீழே அங்கே ஓடுகிறான், அவன் இப்போது நினைத்தான், தன்னை நேர்த்தியாக்கிக் கொள்கிறான். பிறகு இவ்வாறு கூறுகிறான்: “இப்போது, அவர் அந்த மூலையில் சுற்றி வரும்போது, நான் அவரிடம் பேசுவேன், நான் என் மனதின் கருத்தை அவருக்கு தெரிவிப்பேன். அவர் இந்த வழியைக் கடந்துச்செல்ல வேண்டும். ஆகவே, நான்—நான்—நான், அவர் அருகில் வரும் போது, அவ்விதம் செய்வேன்.” பிறகு அவன் இவ்வாறு நினைக்கிறான்: “காரியம் என்ன தெரியுமா, அந்த ஜனக்கூட்டமும் அவரைப் பின்பற்றி வருவார்களே!” 118. அவர்கள் எப்போதும் அப்படித்தான் செய்வார்கள். “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.” கோழிகள் அல்ல, அது பூமிக்குரிய பறவை. வானத்துக்குரிய கழுகு பிணத்தோடு ஒன்று கூடும். ஒரு கோழியானது அதற்கு உறவுமுறையாகிறது. எலிகள் இருக்குமிடத்தில் மற்றும் அது உண்ணக் கூடியவைகள் இருக்குமிடத்தில் இங்கே கீழே அது இருக்கிறது. ஆனால் கழுகோ அங்கே உயரத்திலே மேலே மரத்தின் உச்சியிலே தனது கூட்டைக் கட்டும். மற்ற எவரும் அதை எட்ட முடியாது. ஒட்டுண்ணிகள் அதை தொல்லைப்படுத்தாது. அவை மிக மிக உயரத்தில் பறக்கிறது. இப்போது பிற பிராணிகளைக் கொன்று தின்பவைகளும், கொரித்து தின்னும் பிராணிகளும் அவைகளை தொல்லைப் படுத்தாது, அது ஒரு கழுகு. அவை கழுகின் உணவை விரும்பும். இதுதான் அது. 119. உங்களுக்குத் தெரியுமா, யேகோவா தேவன் ஒரு கழுகாக இருக்கிறார். அவர் நம்மை கழுகுக் குஞ்சுகள் என்று அழைக்கிறார். அவருடைய தீர்க்கதரிசிகள் கழுகுகள், ஞானதிருஷ்டிக்காரர்கள். 120. ஒரு கழுகானது மிகவும் உயரே போகும். வேறு எந்த பறவையும் அதனைத் தொடர்ந்துப் போக முடியாது. ஏன்? ஒரு வல்லூறு அதனை பின்தொடர முயற்சித்தால், அது உருக்குலைந்துபோம். அது சரிதான். இன்றைக்கும் அப்படித்தானே காரியங்கள் உள்ளன. அநேகர் பாவனை செய்ய முயற்சிக்கிறார்கள். அது சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டு விடும். நீங்கள் அதை சிறிது அதிக உயரத்தில் பறக்கவிட்டால், எல்லா சிறகுகளும் வெளியே உதிர்ந்து விடும். ம்..ஹøம், ம்..ஹøம், ம்..ஹøம். சரி, அவைகள் கீழே விழுந்து விடும். ஞாபகங்கொள்ளுங்கள், அது விசேஷித்த வகையில் உருவாக்கப்பட்ட ஒரு பறவையாக இருக்க வேண்டும். மேலும் இந்த வார்த்தையை பின்பற்றும் மனிதன் விசேஷித்த விதமாகக் கட்டப்பட்டவனாக இருக்க வேண்டும், தேவனால் கட்டப்பட்டவனாக, ஒரு வேதபாடசாலையினால் அல்ல. நாம் பார்க்கிறோம், அவன் உயரே போகும்போது, அவனது இறகுகள் நிலைத்து நிற்கவில்லையென்றால் என்ன நன்மையை அது அவனுக்குச் செய்யும்? 121. இன்னொரு காரியம், அது மேலே போகும்போது, அது மேலே செல்கையில், அது குருடாகி, எதையும் பார்க்கமுடியாமல் போனால் அது எப்படியாயிருக்கும்? பாருங்கள். அதற்கு பார்ப்பதற்கு, உயரே அங்கே போகும் போது, தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காண அதற்கு பார்வை இருந்தே ஆகவேண்டும். அவ்வாறே தேவனின் கழுகுகளும் இருக்கின்றன. நீங்கள் உயரே போய், உங்களால் காணமுடிகிற அளவையும் தாண்டிச் சென்று, பின்னர் திரும்பவந்து, சம்பவிக்கப் போகிறது என்ன என்பதை உங்களால் முன்னுரைக்க முடியும். உங்களுக்குப் புரிகிறதா? ஜசபையார் ஆமென் என்கின்றனர் – த.ஆ.ஸ இந்தக் காலை வேளையிலே, அங்கே பின்னால் உள்ள அந்த கறுப்பின சகோதரனுக்கு அது மிகவும் அழகாக புரிந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். பாருங்கள். 122. இப்போது கவனியுங்கள். பிறகு, அவன் சொல் வதை நாம் காண்கிறோம்: “நான் இங்கே நின்றிருந்தால், அதே கூட்டத்தின் சத்தத்தில், அவரால் என் சத்தத்தை ஒருபோதும் கேட்கவே முடியாது. அவர்கள் உரக்க சத்தமிட்டுக்கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவர் எதைப் பற்றியும் கவலை கொள்ளாததை நான் கடிந்து கொள்கிறேன்.” அதுதான் நல்லது. மீண்டும் அவன் சொல்கிறான்: “ஆனால், நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? நான் என்ன செய்ய போகிறேன் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். அங்கே ஒரு காட்டத்தி மரம் இருக்கிறது. நான் அந்த காட்டத்தி மரத்தில் ஏறி, அவர் அருகில் வரும்போது நான் அவரை பார்ப்பேன். பிறகு நான் அதன் கிளைகளில் ஒன்றில் ஏறி, நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை அவரிடம் சொல்வேன். பிறகு நான் தான் சகேயு என்று அவர் அறிந்துகொள்வார். நான் இந்த அருமையான ஸ்தாபனத்தின் அங்கத்தினன் என்று அறிந்து கொள்வார். நான் எதைச் சார்ந்துள்ளேன் மற்றும் என்னுடைய மதகுருவானவர் அவரைப் பற்றி என்ன நினைத் துள்ளார் என்பதையும் அவரிடம் கூறுவேன்.” நல்லது. அது சரியாக இருக்கலாம். 123. அவன் சுற்றிலும் பார்க்கிறான். மேலும் அவன், “இப்போது அடுத்த காரியம். முதல் கிளை ஏறக்குறைய - ஏறக்குறைய பத்து அடி இருக்கும்” என நினைத்தான். அவன் ஏறத்தாழ நான்கு அடி அளவே உயரமானவன். ஆகவே, எப்படி அவன் அடுத்த ஆறு அடியை எட்டமுடியும்? பாருங்கள், ஆகவே அவன் எப்படி அங்கே ஏற முடியும் என்று வியப்புற்றான். அதை அடைய அவனுக்கு வேறு வழி எதுவும் இல்லை. மேலும் அவன் இந்த மரத்தின் மீது ஏறியே ஆகவேண்டும். ஆகவே அவன் சுற்றிலும் முற்றிலும் பார்க்கிறான். அங்கே எதுவுமேயில்லை. ஆனால்... உங்களுக்குத் தெரியுமா, அந்த குப்பைத் தொட்டியானது இன்னும் அந்தக் காலை வேளையில் வெளியேற்றப் படாதிருந்தது. அந்தக் குப்பை பெட்டிகள் அங்கே மூலையில் இருந்தன. அவன் இவ்வாறு நினைத்தான்: “அந்தக் குப்பை சேகரிக்கப்படும் பெட்டியை நான் இங்கு எடுத்துவந்தால் போதுமான உயரம் கிடைக்கும், நான்... அதன் மீது ஏறி அந்த முதல் கிளையை பிடித்துவிடுவேன். ஆதலால் நான் அவரை பார்க்க முடிவெடுத்துவிட்டேன். நான் அவரை பார்க்கப்போகிறேன்.” 124. உங்களுக்குத் தெரியுமா! அதைப்பற்றி சில காரி யங்கள் உள்ளன. ஒரு மனிதன் இயேசுவைக் காண விரும்பிவிட்டால், அவன் மிகவும் தீவிரமான சில காரியங்களினூடாக போகிறான். பாருங்கள்! ஆனால், பாருங்கள், தேவன் அவனோடு இடைபட்டுக் கொண்டி ருந்தார். அது என்ன? ரெபேக்காளின் வேண்டுதல்கள் பதிலளிக்கப் படுவதாகும். பாருங்கள். 125. நல்லது, அவன் அங்குச் செல்கிறான். இந்தக் காலையில் குப்பை சேகரிப்பவன் இன்னும் வரவில்லை, அந்தப் பெட்டியும் மிகவும் கனமாக இருந்தது. ஆகவே அவனால் அதைக் தூக்க முடியவில்லை. அவன் மிகவும் குள்ளமாக இருந்தான். அவன் முயற்சித்தான், அவனால் முடியவில்லை. அதைச்செய்ய அவனுக்கு ஒரே ஒரு வழி தான் இருந்தது. அது என்னவென்றால், தனது கைகளினால் அதை இறுகப் பற்றி தூக்குவதே ஆனால், அவனோ தனது உடைகளில் சிறந்ததொன்றை அணிந்திருக்கிறான். 126. ஆனால், அதைக் குறித்து சில காரியங்கள் உள்ளன. நீங்கள் எப்படியாவது இயேசுவை பார்த்தே ஆக வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். பாருங்கள்! நீங்கள் அவரை கட்டாயம் பார்க்க வேண்டுமென்று இருந்தால், நீங்கள் - நீங்கள் வெறுமனே எதை வேண்டுமானாலும் செய்வீர்கள், ஆகவே அவன் அங்கே வந்தான்... பாருங்கள், அதை செய்வதிலிருந்து உங்களை தடை செய்ய சாத்தான் முயற்சிப்பான். எல்லாவற்றையும் அவன் வைக்கிறான்... ஒவ்வொரு முறையும், பாதையில், நீங்கள் அவரை காண்பதிலிருந்து உங்களை தடுக்கும் நோக்கில் அவன் ஒரு பெலவீனத்தை வைப்பான். அவனால் முடிந்த எதை கொண்டாகிலும் உங்கள் கண்களை குருடாக்குவான். ஆனால் நீங்கள் தீர்மானமாக இருந்தால், தேவன் உங்களுக்காக ஒரு வழியை உண்டாக்குவார். இந்தக் காலை வேளையிலும் கூட அவர் இந்த பாதையில் கடந்து செல்கிறார். உங்கள் வழியில் சாத்தான் எதையாவது போட விடாதீர்கள். “உங்கள் நேரம், இந்த காரியம், மேலும் நான் இதை செய்தாக வேண்டும்” போன்றவை. வெறுமனே அமைதியாக ஒரு நிமிடம் உட்காருங்கள். 127. ஆகவே அந்த அருமையான உடையை அணிந்த வாறே அவன் கீழாக சென்று குனிகிறான். இப்பொழுது அவன் தன்னை நிச்சயமாகவே கெடுத்துக் கொண்டிருக் கிறான். அவன் அந்தக் குப்பைத்தொட்டியைப் பற்றிப் பிடிக்கிறான். அவன் அதை பற்றிப் பிடித்து அதை தூக்க முற்பட்ட அதே நேரம், இதோ அவனுடைய சகபோட்டி யாளர்கள் அந்த மூலையிலே வந்துவிட்டார்கள். ஜசகோ. பிரன்ஹாம் மற்றும் சபையார் சிரிக்கின்றனர் – த.ஆ.ஸ 128. இங்கே இருக்கிற சகேயுவின் நிலைமை. நீ இந்தப் பரிசுத்த உருளைகள் கூட்டத்தில் ஒருபோதும் இருக்க மாட்டேன் என்று சொன்னாயே, ஆனால் இப்போது இங்கே இருக்கிறாயே. 129. நல்லது, இங்கே அவன் நிற்கிறான், இங்கே இப்போது இந்தக் குப்பை தொட்டியோடு நின்று கொண்டிருக் கிறான். அவனுடைய – அவனுடைய முகம் சிவந்து விட்டது. நல்லது, அவனுடைய சக போட்டியாளர்கள், “அங்கே பாருங்கள், சகேயு அங்கே இருக்கிறான், அங்கே இருக்கிற அந்த உணவகத்து உரிமையாளன் தன் தொழிலை மாற்றிக் கொண்டான். அவனுக்கு ஒரு புதிய பதவி கிடைத்து விட்டது போலும். நல்லது உங்களுக்குத் தெரிகிறதா, அவன் ஒரு... அவன் ஒரு... இந்தப் பட்டிணத் திற்காக வேலை செய்கிறான். குப்பைகளை வெளியேற்று பவனாக” என்றனர். நல்லது, இன்னுமொரு காரியமும் அதைக்குறித்து உள்ளது. நீங்கள் இயேசுவைக் காண தீர்மானித்து விட்டால், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். அவன் அதனோடு மும்முரமாக இருந்தான். அவன் முகம் நாணியிருந்தான், அவன் முகம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது (reddened and swelled out). இங்கே அவன் செல்கிறான், சரியாக அங்கே அவன் அதை கீழே வைக்கிறான், அவன் சுற்றிலும் பார்க்கிறான். “அவர்கள் அந்த மூலைக்குச் செல்லட்டும்.” 130. பிறகு அவன் அந்தப் பெட்டியின் மீது ஏறுகிறான், மரத்தின் மீது தத்தித் தத்தி ஊசலாடிக் கொண்டே (shimmies up the tree) ஏறுகிறான். ஹøஹø, என்னை மன்னியுங்கள். நான் அதைச் சொல்லி இருக்கக் கூடாது. ஷிம்மி (Shimmy) உங்களுக்குத் தெரியுமா? அது - அது ஒரு... எத்தனைப் பேருக்கு “தத்தித் தத்தி மரம் ஏறுதல்” என்பது தெரியும்? நல்லது, அப்படியானால் அவ்வளவுதான். பாருங்கள், வேறு வார்த்தையில் கூற வேண்டுமானால், அவன் மரத்தின் மீது ஏறுகிறான். 131. அவன் அங்கே மேலே ஏறுகிறான். அங்கே அவன், அங்கே உட்கார்ந்திருக்கிறான். நீங்கள் ஒரு “அலங்கோலம்' என்பதைப் பற்றி பேசுகிறீர்கள்! அவன் மீது முழுவதும் குப்பை கழிவுகளாக, பார்ப்பதற்கு அசுத்தமான ஒருவனாக இருக்கிறான். 132. மேலும், சில சமயம் நீங்கள் அவ்விதம் நடக்கும்படி தேவன் செய்கிறார். ஆமென். இன்று யாரோ ஒருவர் சொல்லக் கேட்டேன், அவர்களுடைய புதிய வழி உங்களுக்குத் தெரியுமா? இது ஒருபோதும் நமது பெந்தெ கொஸ்தே ஆதிக்கத்தில் நுழையவில்லை என்று நம்பு கிறேன், இருப்பினும் அது ஆங்காங்கே நுழைவதைக் காண்கிறேன். உள்ளே வந்து, கைகுலுக்கி வெறுமனே, “நான் - நான் இயேசுவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்” என்பது. ஆனால் அவர்கள் பலிபீடத்திற்கு வரும்படியும், மரிக்கும் படியும், அடிக்கவும், உமிழ்நீர் வழிய கத்தவும், போன்றவற்றையே நான் பார்க்க விரும்புகிறேன். மேலும், உங்களுக்குத் தெரியுமா, நீங்கள்... எங்களுக்கு சில குதிரைகள் இருந்தன. அவைகளுக்கு க்ளோவர் (Clover) எனப்படும் ஒரு வகையான தாவரச்செடி, அது நிஜத்தில் அழகாகவும், இனிப்பாகவும் இருக்கும், தேன் அதனுள் இருக்கும், அதை கொடுக்கும்போது அது அவைகள் வாயில் எச்சில் ஊறச்செய்யும். நீங்கள் கானானுக்கு (Canaan) மிகவும் அருகாமையில் சென்றால் உங்களுக்குக் கூட கொஞ்சம் எச்சில் ஊறும்- கானானிலிருந்து கிடைக்கப்பெற்ற தேனை சாப்பிடுதல். 133. ஆகவே இப்போது நாம் அவன் இங்கே மரத்தின் மேல் இருப்பதை காண்கிறோம். தனது புதிய ஆடை யிலிருந்து குப்பைகளை துடைத்துக் கொண்டிருந்தான். அவன் இப்படியெல்லாம் செய்வான் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. உங்களுக்காக ஜெபிக்கும் படி யாரையாவது வெறுமனே அனுமதியுங்கள், அப்பொழுது நீங்கள் வினோதமான காரியங்களை செய்வீர்கள். இவன் இந்தவிதமாக அவைகளை துடைத்துக் கொண்டிருக்கிறான். அவன் அங்கே உட்கார்ந்து கொண்டு அவனது முழங்காலிலும், கைகள் மேலும் ஒட்டியுள்ள சிறு சிறு குப்பைத் துகள்களை பொறுக்கி அகற்றிக் கொண்டிருக் கிறான். அவன் சொன்னான்: “நல்லது! இப்போது நான் அழுக்காக இல்லை! இங்கே நான் உட்காரட்டும். ரெபெக்காள் என்னிடம் அந்த நபர் ஒரு தீர்க்கதரிசி எனக் கூறியிருக்கிறாளே, இப்போது நான் - நான் காத்திருக்கப் போகிறேன். நான் ஒளிந்துக் கொள்ளப்போகிறேன்.” ஆகவே அவன் இரண்டு கிளைகள் சந்திக்குமிடத்தில் உட்காரு கிறான். உட்காருவதற்கு ஒரு அருமையான இடமாக அது அமையும். 134. நீங்கள் அவ்வளவு தூரம் வந்த பிறகு, மேலும் இந்த காலை வேளையில் சகேயுவே, நீ இவ்வளவு தூரம் வந்துவிட்டாய், உன்னுடையதும் தேவனுடையதும், இரு வழிகள் சந்திக்குமிடத்தில், நீ உட்கார்ந்து கொண்டிருக் கிறாய். பாருங்கள்! இந்த காலை வேளையில் நீங்கள் இங்கே வருவதற்கு போதுமான அளவு உங்களையே உட்படுத்தியிருந்தால், நல்லது, அப்படியானால் ரெபேக் காளின் ஜெபங்கள் பதிலளிக்கப்பட உள்ளது. ஆனால், இப்போது, நீ இரண்டு வழிகள் சந்திக்குமிடத்தில் உட்கார்ந் திருக்கிறாய். உன்னுடையதும் (வழியும்), தேவனுடையது மாக (வழியும்). பாருங்கள். 135. மேலும், அவன் அங்கே உட்கார்ந்தவனாய் இவ்வாறு நினைத்தான்: “அவர் ஒரு தீர்க்கதரிசி' என்றும் மற்றும் இவையெல்லாவற்றையும் அவள் கூறியிருக்கிறாள். “அவரால் ஜனங்களுடைய இருதயங்களின் எண்ணங்களை எண்ண முடியும், அதை அவர்களுக்கு வெளிப்படுத்தவும், அவர்களிடத்தில் என்ன தவறு உள்ளது என்பதையும் அவர்களிடம் கூறவும் முடியும்.' மேலும், ஓ! இது நாத்தான்வேலை பற்றியக்காரியம். அவர் அவனிடம், அங்கே அவன் ஒரு மரத்தின் கீழாக இருந்ததை கூறினார். உங்களுக்குத் தெரியுமா! நான் எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்கப் போவதில்லை. நான் இங்கே இந்த மரத்தின் மேல் என்னை மறைத்துக் கொள்ளப்போகிறேன். ஆகவே நான் ஒரு மரத்தில் இருக்கிறேன். இருந்தாலும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதை நான் நம்ப மாட்டேன். ஏனெனில் என்னுடைய குருவானவர், தீர்க்கதரிசி என்கிறதான எந்த ஒரு காரியமும் இல்லை. நூற்றுக்கணக்கான வருடங்களாக அவ்வாறு நாம் அவர்களை கொண்டிருக்கவில்லை என்று சொல்லியிருக்கிறாரே.” 136. ஆகவே, இப்போது நிச்சயமாக, நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள், ஒரு கருத்தை எடுத்துரைக்க, நான் இங்கே ஒரு நாடக காட்சி போல அதை உருவகப்படுத்துகிறேன். 137. ஆகவே அவன் எல்லா கிளைகளையும் தன்னை சுற்றிலும் இழுத்து மிகவும் அருமையாக தன்னை மறைத்துக் கொண்டான். “இப்போது அவர் அல்லேலூயா அவென்யூ வழியாக வந்து கொண்டிருக்கிறார், அல்லேலூயாவிலிருந்து மகிமை வீதிக்கு வருகிறார். ஆகவே சரியாக இங்கே இந்த மூலையில், அவர் அந்த வழியாக வந்து, இந்த மூலையில் திரும்பும் போது, நான் ஒரு பெரிய இலையை விலக்கப் போகிறேன், அதன்மூலம் அவரை வெளியே என்னால் பார்க்கமுடியும். நான் இதை தூக்கி விடுவேன். அவரால் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது, இங்கே மேலே. ஆனால் அவர் அருகில் வரும் போது, என்னால் அவரை தெளிவாக பார்க்கமுடியும். நான் என்ன செய்ய போகிறேன் தெரியுமா? நான் இந்தக் கிளைகளை பின்னால் இழுக்கப்போகிறேன். இங்கே அருகில் அவர் வந்தவுடன், நான் அவருக்கு என் மனதிலுள்ளவற்றின் ஒரு பகுதியை கொடுக்கப் போகிறேன். அதைப்பற்றி அவரிடம் நான் சொல்லப்போகிறேன். ஆகவே அவன் சிறிது நேரம் அங்கே தரித்திருக்கிறான். 138. சிறிது நேரத்திற்குப் பின்பு ஒரு இரைச்சல் சத்தம் வருகிறது. வழக்கமாக இயேசு அப்படிப்பட்ட ஆரவாரங் களோடு வருவார். ஆகவே இங்கே, அவர் அந்த மூலையை வந்தடைந்தார். இப்பொழுது அவன் - அவன் காணும் முதல் காரியம் என்ன? ஒரு கூட்ட மக்கள் வீதிகளை சுற்றிலும் திரண்டிருக்கிறார்கள். அவன், “நல்லவேளை நான் மரத்தின் மேலே இருப்பதற்காக சந்தோஷப்படுகிறேன். ஆனபடியால் நான் மீண்டும் அவர்களோடு கலக்கபோவதில்லை” என்றான். ஆகவே இங்கே உயரத்தில், மரத்தில் அவன் உட்கார்ந்திருக்கிறான். அங்கே உட்கார்ந்தவனாய், எல்லா விதமான மாறுவேட மறைப்புகளும் அவன் மீது உள்ளன. ஆகவே யாரொருவரும் அவனை கண்டுபிடிக்கமாட்டார்கள். அவனது சக போட்டியாளர்களும் இப்போது அவன் அங்கே மரத்தில் இருப்பதை அறியார்கள். ஆகவே அவன் வெறுமனே ஒரு இலையை விலக்கி வெளியே பார்க்கிறான், மீண்டும் அந்த இலையை பின்னால் இழுத்து விடுகிறான். அவனது மற்ற பாகங்கள் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. ஆகவே அவன் அந்த இலையை உயர்த்திப்பிடித்தான். ஜனங்கள் எல்லோரும் மூலையில் கூடி வருகிறார்கள். 139. மேலும் உங்களுக்குத்தெரியுமா, இங்கே திரு.ஜோன்ஸ், அந்த வியாதிப்பட்ட குழந்தையோடு வருகிறார். அவரது சொந்த உணவகத்தில், அன்றொருநாள் போதகரும், மருத்துவரும் கலந்துரையாடிக் கொண்டிருந் ததை அவன் கேட்டான். “அந்தக் குழந்தை மரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காய்ச்சல், மருத்துவர் அதைச் சரியாக்க முயன்றும், அதைச் சரியாக்க அங்கே வாய்ப்பில்லாதிருந்தது. அந்தக் குழந்தை வீட்டிலிருந்து வெளியே வரவே கூடாது. ஆனால் இங்கேயோ அந்த…” அவனது முக்கிய வாடிக்கையாளர், “அந்தக் குழந்தையை அவர்கள் மார்ச் மாத காற்றில் வெளியே கொண்டு வரும் அளவிற்கு அவ்வளவு மதவைராக்கியமாக மாறிவிட்டது. பத்து வயது மதிக்கத்தக்க சிறு பெண்ணை இங்கே அவர்கள் ஒரு கம்பளியில் சுற்றிவைத்துள்ளனர். என்னே ஒரு மதவைராக்கியம்! அவர் மீண்டும் என்னுடைய உணவகத்திற்கு வரும்போது, நிச்சயம் அந்தக் குழந்தை இறந்திருக்கும். நான் அவரிடம் பேசுவேன், நான் அவருக்கு என் மனதிலுள்ளவற்றை அறிவிப்பேன். “ 140. சிறிது நேரத்திற்குப் பின்பு சத்தம் அதிகரித்துக் கொண்டே போனது. அவர்கள் எல்லோரும் வீதியில் ஓடுகிறார்கள். முதலில் அல்லேலூயா அவென்யூவின் மூலையிலிருந்து வந்து, மகிமை வீதி மூலை வரைக்குமாக (கூட்டம்) வருகிறது; வீதியை சுற்றி அவர்கள் வரும்போது, நாம் பார்க்கிறோம், ஒரு பெரிய, பருமனான வழுக்கைத் தலையையுடைய மீனவன் சீமோன் என்ற பெயர் கொண்டவன் சொல்கிறான்: “ஜனங்களே, தயவுசெய்து கொஞ்சம் விலகிச்செல்லுகிறீர்களா?” இங்கே பதினொரு பேரும் அவனுக்கு பின்னாக இருந்துகொண்டு, “தயவுசெய்து நீங்கள் சற்று விலகிச் செல்லுகிறீர்களா? நமது ஆண்டவர் நேற்று சாயங்காலம் மகத்தான ஒரு ஊழியத்தில் இருந்தார். வல்லமை அவரிடமிருந்து புறப்பட்டது. மகத்தான தரிசனங்கள் நடைபெற்றன. அவர் இன்று காலையில் மிகவும் சோர்வாக உள்ளார். அவர்-அவர்-அவர் காலை உணவு எடுக்க சென்று கொண்டிருக்கிறார். தயவுசெய்து நீங்கள் சிறிது விலகிச் செல்கிறீர்களா?” 141. இங்கே ஜோன்ஸ் குடும்பத்தினர் குழந்தையுடன் போகிறார்கள். பெரிய மீனவன் மற்றும் அவர்களில் அநேகர், “பின்னாலே போங்கள், போகிறீர்களா தயவுசெய்து?” என்றனர். “நல்லது, இங்கே எங்களிடம் ஒரு குழந்தை இருக்கிறது. வெறுமனே, அது இப்போது மரிக்கப் போகிறது. மருத்துவர்கள் கைவிட்டுவிட்டனர். நீங்கள் தயவு கூர்ந்து, கூடுமானமட்டும் இந்தக் குழந்தையைக் கிடத்த... எங்களை விடுவீர்களா?” 142. “என்னை மன்னியுங்கள். அனைவருமே அதற்காகத் தான் இருக்கிறார்கள். ஆகவே நான்-நான் அதை வெறுமனே செய்ய முடியாது. நீங்கள் அங்கே வெளியே தள்ளியிருக்கத்தான் வேண்டும். இப்போது அவர் வந்து கொண்டிருக்கிறார். நீங்கள் தயவு செய்து தள்ளிப் போகிறீர்களா?” 143. ஆகவே என்னால் பார்க்கமுடிகிறது, சிறிய காவற்காரன், உயரமான இடத்திலிருந்து, மரத்திலிருந்து கவனித்தான். அவன் திரு.ஜோன்ஸ் மற்றும் திருமதி. ஜோன்ஸ÷ம் அந்தக் கூட்டத்தின் நடுவில் தங்கள் முழங்காலில் நின்றுகொண்டு, “கர்த்தராகிய தேவனே, என்னை கடந்து போய்விடாதீர். ஓ! பண்பான இரட்சகரே, என்னுடையத் தாழ்மையான அழுகையை கேளும். மற்றவர்களுடன் நீர் இடைபட்டுக் கொண்டே என்னைத் தாண்டி கடந்து போய்விடாதேயும்” என்று கூறினான். 144. அவர் அவ்விடம் வரும்போது, அவர் நின்றார். அவர், “திரு.ஜோன்ஸ், உங்கள் குழந்தையை இங்கே கொண்டு வருகிறீர்களா?” என்று கேட்டார். அது சற்று ஆறுதலாக இருந்தது. 145. அவர் இன்றும் அவ்வாறே இருக்கிறார். ஜெப அட்டையை எடுப்பதல்ல. ஒரு குழுவை எடுத்து கொள்வதல்ல. இது விசுவாசத்தை எடுத்து கொள்வதாகும். மற்றொரு பக்கத்தில் உள்ள வாசல் வழியாக இயேசு சென்ற போது, அந்த குருடனான பர்திமேயு செய்தது போல. அவரைவிட்டு இருநூறு கெஜ அடிகள் தூரம் தள்ளியிருந்த அவனது சத்தத்தை அவரால் எப்படி கேட்க முடிந்தது? ஆனால், “ஓ இயேசுவே, தாவீதின் குமாரனே!” என்பது அவரை நிறுத்தியது, அவரது அங்கியை தொடச்செய்தது. அவர் திரும்பி சுற்றிப்பார்த்து, “அவனை இங்கே கொண்டு வாருங்கள்” என்றார். பாருங்கள்! 146. அங்கே அவர்கள் அந்த சிறு குழந்தையைக் கொண்டு வந்தனர். அவர் அவரது கைகளை சிறிய குழந்தையின் மீது வைத்தார். அவ்வளவுதான் அவர் செய்தது. சில நொடிகளிலே அந்தத் தந்தை குழந்தையைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்; அந்தக் குழந்தை வீதியின் வழியாக ஓடிச் சென்றது. காய்ச்சல் அதை விட்டுப் போய்விட்டது. 147. இது சிறிதளவு அவனை (சகேயுவை) ஓரளவுக்கு மென்மையான மனநிலைக்குக் கொண்டுவந்தது. அவன், “அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பாரோ? என்று ஆச்சரியப் படுகிறேன்!” என்றான். அது அவனை ஒருவகையில் விசுவாசிக்கச் செய்தது. 148. உங்களுக்குத்தெரியும், நம்மை திருப்திப்படுத்து கிறதான அதைப் போன்ற காரியங்கள் உண்டு, ஏனெனில் அவர் வார்தையாக இருக்கிறார். இருந்தார் என்றல்ல, இருக்கிறார். 149. அவர் மரத்திற்குக் கீழே வந்தபோது, அவன் நினைத்தான்... நல்லது, அவன் இந்தச் சிறிய இலையை உயர்த்தி பிடித்துக் கொண்டு, கீழே கவனித்துக் கொண்டிருந்தான். அவர் மரத்தினடியில் வந்துபோது அவன், “இவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பாரோ? ஒருவேளை இருக்கலாம்” என்று நினைத்தான். நீங்கள் பாருங்கள். நீங்கள் விசுவாசத்தைப் பெற வேண்டியவர்களாயிருக் கிறீர்கள். “அவர் அப்படியிருப்பாரோ?” மேலும் அவர் மரத்தின் கீழே கடந்து போனபோது, தம் தலையை கீழே குனிந்தவாறு, தம்முடைய சாதுவான முறையில் நடந்தார். 150. இதில் இன்னொரு விஷயம் உண்டு. எப்போ தெல்லாம் நீங்கள் அவரைப் பார்க்கிறீர்களோ, அப்போது நீங்கள்-நீங்கள் – நீங்கள் மாறிவிட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் அப்படியே இருக்க முடியாது. நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் அவரைப் பார்த்தபோது, அவரது வார்த்தையைக் கண்டபோது, பின்னர் நான்-நான்-நான் ஒருபோதும் அப்படியே இருக்க முடியாது. அவரைப்பற்றி ஒரு காரியம் உள்ளது. அது மற்ற மனிதர்களிடமிருந்து வித்தியாசமானது. அவரைப் பற்றியக் காரியம், பிஷப்புகள், கார்டினல்கள், போப்புகள் முதலானோரிடமிருந்து வித்தியாச மானது. அவரைக்குறித்தக் காரியம், அது வித்தியாசமானது. 151. குள்ள சகேயு தொடப்பட்டான். ரெபேக்காளின் ஜெபம் கேட்கப்பட்டுவிட்டது. அவர் மரத்தை கடக்கும்போது, “நல்லது, நான்-நான், திரும்பி போகும்போது, ரெபேக்காளிடம் மன்னிப்பு கோருவேன் அல்லது கேட்பேன். அவர், லாவின்ஸ்கியர் (Lavinskis) உணவகத்துக்குப் போகும் பாதையில் இருக்கிறார். அது பரவாயில்லை. அவர் வேறொரு உணவகத்தில் சாப்பிட்டாலும் கூட, இப்பொழுது எனக்கு அது எந்த பிரச்சினையும் இல்லை.” என்றான். பாருங்கள், அவன் அவரை பார்த்து விட்டான். 152. ஆகவே, அவர் மரத்தின் கீழே சரியாக வந்த வுடன், அவர் நின்றார். மேலே பார்த்து, “சகேயுவே, இறங்கிவா, இன்று இரவு உணவிற்காக, நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்றார். பாருங்கள், அவன் மேலே அங்கே இருக்கிறான் என்று அவருக்குத் தெரியும், அவன் எப்படிப்பட்டவன் என்று அவருக்குத் தெரியும். 153. சகோதரனே, சகோதரியே, அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இன்றுக் காலையிலே இந்த வழியே கடந்து செல்லப் போகிறார். அவர் நகரத்தினூடாக இந்த பாதையைக் கடந்து, இந்த வாரம் நம்முடன் இங்கே இருக்கிறார். 154. என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஜனாதிபதி வந்தால், ஜனாதிபதி ஜான்சன், டோபிகாவுக்கு (Topeka) வரும்போது கொடிகள் ஏற்றப்படும். வீதிகள் அலங்கரிக்கப்படும். அவருக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கப்படும். ஆனால் இயேசு வருவாரானால், அவரைக் காண வேண்டும் என்று யாராவது வந்தால்கூட அது அரிதானதாயிருக்கும். ஒரு ஜனாதிபதி இந்த நகரத்திற்குள் வந்தால், நிச்சயமாக காவல்துறை பந்தோபஸ்து இருக்க வேண்டியிருக்கும். ஆனால் நமக்கு அதிகமான காலியான நாற்காலிகள் உள்ளன. வித்தியாசத்தை பாருங்கள்? அவரை காண அவர்கள் அக்கறை கொள்வதில்லை. 155. இந்தக் காலையிலே, சகேயு இங்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அவர் இந்த பாதையில் கடக்கும்போது, உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒருவர் அவரே. 156. அவன் மரத்தை விட்டு கீழே வந்தான். நிச்சய மாகவே, விமர்சனம் செய்பவர்கள், “இந்த மனிதன் ஒரு பாவி” என்று சொல்ல விழைந்தார்கள். 157. அவன் சொன்னான்: “கர்த்தாவே, நான் தவறுதலாக சம்பாதித்த பொருள் என்னிடமிருந்தால் நூறு மடங்காக திருப்பி தருகிறேன். நான் அதைத் திருப்பி கொடுத்துவிடுகிறேன். நான் எந்த மனிதனையாவது ஏமாற்றியிருந்தால் அதை சரிசெய்து கொள்ளுகிறேன். நான்-நான் தயாராக உள்ளேன்.” நாம் தலைகளை வணங்குவோமாக. 158. சகேயுக்களே, நீங்கள் இந்தக் காலையிலே ஆயத்தமாக இருக்கிறீர்களா? நீங்கள் ஏன் இப்பொழுது மரத்தை விட்டு கீழே வரக்கூடாது? நீங்கள் ஏன் வராமலிருக்கிறீர்கள்? அவர் இப்போது இந்த வழியே கடந்து செல்கிறார், உங்களோடு பேசுகிறவராய், உங்கள் இருதயத்தின் வழியே கடந்து செல்கிறார். நீங்கள் உங்கள் தலையை தாழ்த்தியிருக்கும் இவ்வேளையில் ஜெபித்துக் கொண்டு, “சகோ.பிரன்ஹாமே, மெய்யாகவே நான் எப்பொழுதுமே சற்று சந்தேகம் கொள்கிற ஒருவனாக இருந்து வருகிறேன்” என்று கூறுபவர்கள் யாராவது இங்கே இருக்கிறீர்களா? நினைவில் கொள்ளுங்கள், அவனே ஒரு மதநம்பிக்கையுள்ள மனிதனாகத்தான் இருந்தான். “எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் இப்போது நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய அவிசுவாசம் நீங்க உதவிசெய்யும் தேவனே.” சகோ. பிரன்ஹாமிடம் அல்ல. “தேவனும் நானும் தவிர யாரும் பார்க்கவில்லை, ஆகவே நான் என் கரத்தை உயர்த்தி, “என்னைவிட்டு கடந்துவிடாதேயும், ஓ! பண்பான இரட்சகரே! என்னுடைய தாழ்மையான சத்தத்திற்குச் செவி கொடும். கர்த்தாவே, என்னை ஒரு உண்மையான விசுவாசியாக மாற்றும். வாரும், என்னுடன் என் வீட்டிற்கு இன்று வாரும்' என்று சொல்வேன்.” “இன்று கண்டிப்பாய் நான் உன் வீட்டில் தங்குவேன்.” 159. உங்கள் கைகளை உயர்த்தி இப்படிச் சொல்வீர் களா? “என்னை நினைவுகூரும் தேவனே!” என்று. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை ஆசீர்வதிப்பாராக… “என்னை நினைவு கூரும் தேவனே, இந்தக் காலையிலே என் வீட்டிற்கு வாரும். இங்கே நீர் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். என் இருதயத்தை நீர் அறிவீர் என்று எனக்குத் தெரியும். இப்போது என்னோடு நீர் பேசிக் கொண்டிருக்கிறீர். நான் செய்த தவறுகளை நீர் அறிந்திருக்கிறீர். நான் ஒரு முழு சுவிசேஷ சபையைச் சார்ந்தவன் என்பதுகூட உமக்குத் தெரியும். இருப்பினும் நான் அசட்டையாய் இருந்துள்ளேன். எது சரியானதோ, அதை நான் செய்யவில்லை. நான் ஜெபக்கூட்டங்களை அசட்டை செய்திருக்கிறேன். நான் மற்ற எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். உண்மையாகவே, நம்முடைய - நம்முடைய விசுவாசத்திற்கு புறம்பான சில காரியங்களை நான் செய்திருக்கிறேன்.” 160. “நான்-நான்-நான் ஒரு பெண்மணி. நான் தவறாக உடுத்தியிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் என் தலைமயிரை வெட்டியிருக்கிறேன். நான் அழகு கூட்டும் சாதனங்களை (Makeup) பயன்படுத்தியிருக்கிறேன். நான் ஒரு முழு சுவிசேஷ சபையில் உள்ள பெண்மணியாக, சகோதரியாக இருக்கிறேன். என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே. நான்-நான், இன்று நீர் என் வீட்டிற்கு வரும்படியாக விரும்புகிறேன். மேலும் நான்-நான்-நான் கிறிஸ்துவுக்கு ஒரு ஜீவிக்கிற உதாரணமாக, இப்போதிலிருந்தே இருக்க விரும்புகிறேன்.” “எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறும்படி உங்கள் கரங்களை உயர்த்தச் செய்கிற தேவனுடைய பிரசன்னத்தை உங்களால் உணர முடிகிறதா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், உங்களை... தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரிகளே. ஆம். 161. பரலோகப் பிதாவே, சில ஆண் சகேயுக்கள் மற்றும் பெண் சகேயுக்கள் இலையை உயர்த்தி வெளியே பார்த்தனர். தாங்கள் எங்கே வசிக்கிறார்கள், தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இயேசுவானவர் கண்டு கொண்டார் என்பதையும், தாங்கள் எதிலே தவறாய் இருக்கிறார்கள் என்பதை அவர் தங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டனர். அநேக, அநேக கரங்கள் இங்கே உயர்த்தப் பட்டுள்ளன. பிதாவே, இன்று நீர் அவர்களோடுகூட அவர்களுடைய இல்லங்களுக்கு செல்வீரா? அவர்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் இருதயங்களில் வாசம் செய்யும். அவர்கள் இந்தக் காலை வேளையை ஒருபோதும் மறக்காதிருப்பார்களாக. இருப்பினும், இதில், சிரிக்கத்தக்கதான விஷயங்கள்... நான்... மேலும் நகைச்சுவை உணர்வாக, பலரும் கலந்துள்ள கூட்டத்தின் மத்தியில் அதை கொண்டுவர முயற்சித்தேன். ஆனால், இப்பொழுது இந்நேரத்தில், காரியத்தின் கருத்தானது வெளிப்பட்டிருக் கையில், இது-இது இந்தக் காலையில், இங்கே நம்மோடு என்ன நின்றுகொண்டிருக்கிறது (யார் நின்று கொண்டிருக்கிறார்) என்பதை மாத்திரம் ஜனங்கள் உணரும்படி செய்வதற்காக, அதாவது, வார்த்தையானது நம்முடைய பட்டிணத்தில், நம் மத்தியில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது, அது கர்த்தராகிய இயேசு தாமே. வார்த்தை யானது மாம்சமாகி, மனித சரீரத்தின் மூலம் இயங்குவது. ஓ தேவனே! எங்கள் அன்புக்குரிய நண்பர்கள் இதைப் பார்க்கட்டும், உம்மிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு வரப்படட்டும். 162. பிதாவே! நான் மீண்டும் கேட்கிறேன், ஒவ்வொரு சகேயுவுடனும் ஒவ்வொரு ஸ்திரீயுடனும், ஒவ்வொரு ரெபெக்காளுடனும் அவர்கள் இல்லத்திற்கு அவர்களோடு கூட போகும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அவளுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டது என்பதை அவள் அறிந்து கொள்வாளாக. இப்போது அவர்களை உம்மிடம் ஒப்படைக் கிறேன். அந்த சிறுஉருவமுள்ள எபிரேயன் அந்தக் காலையில் செய்ததுபோல, இவர்கள் தவறு செய்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் எந்தவித தயக்கமுமின்றி உம்மை தங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்வார்களாக. “இவனும் ஆபிரகாமுக்கு குமாரன் அல்லவா?” என்றீர். ஆகவே நீர் எங்களோடு வீட்டிற்கு வர ஆயத்தமாக இருக்கிறீர், பிதாவே! நீர் எங்களை ஒருபோதும் கைவிடாதிருக்கும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்தக் காலையில் நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்கையில், காலை சிற்றுண்டி முடித்து செல்கையில் எங்களோடு வாரும். மேசையின் எதிரே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும், சந்தோஷமாக, நகைச்சுவை உணர்வோடும், ஒருவர் கரங்களை ஒருவர் குலுக்கிக்கொண்டும், ஒருவரோடு ஒருவர் அன்போடும், கிறிஸ்தவர்கள் மாத்திரமே செய்யக் கூடியவற்றை செய்திருக்கிறோம். 163. மேலும் நான்-நான்-நான் மீண்டும் இங்கே ஒருபோதும் இருக்கப் போவதில்லை என்று நினைக்கிறேன். நான்-நான் இவ்வாறாக இந்தக் ஜனங்களை ஒருபோதும், மீண்டும் இன்னொரு காலை சிற்றுண்டியில் (விருந்தில்) சந்திக்க முடியாமற் போகலாம். ஆனால் பிதாவே! நான் நிச்சயம் கூறுகிறேன்: அவர்கள் இன்று உம்மை தங்கள் வீட்டிற்கு வரவும், தங்களோடு தங்கியிருக்கவும் அனுமதித்தால், நான் அவர்களை இராப்போஜனத்தில் (இராவிருந்தில்) சந்திப்பேன், அப்போது யுத்தங்கள் எல்லாம் ஜெயிக்கப்பட்டிருக்கும்; மகத்தான பெரிய மேசையானது, வான வெளியிலே விரிக்கப்பட்டிருக்கும். நாங்கள் உட்கார்ந்து எதிரெதிரே பார்த்துக்கொள்வோம். 164. இங்கே உட்கார்ந்திருக்கும் ஊழியக்காரர்களை இந்தக் காலையில் காண்கிறேன். நரைத்த தலையோடு, நான் சிறு பையனாய் இருந்தபோது பிரசங்கித்தவர்கள். நான் நினைக்கிறேன், அவர்கள்தான் அடிக்கட்டையை வெட்டி, சாலைகளை வெடிக்கச் செய்து, வரும் என்று அவர்கள் தீர்க்கதரிசனமாக உரைத்த இந்த வரங்கள் ஓடுவதற்கேற்ப மென்மையாக ஆக்கி இருக்கிறார்கள். தேவனே! அவர்களை ஆசீர்வதிப்பீராக. அவர்கள் எல்லோரையும் ஆசீர்வதியும். தங்கள் கணவன்மார்கள் பிரசங்கிக்கும்படியாக தியாகங்களைச் செய்துள்ள இந்த அருமையான ஸ்திரீகளை ஆசீர்வதியும். தியாகங்களை உண்மையாகவே செய்யக்கூடிய எல்லா கிறிஸ்தவர்களையும் ஆசீர்வதியும். பிதாவே! அவர்களோடிரும். 165. அந்த இரவிலே, நாம் அங்கு உட்கார்ந்திருப்போம். இன்றுக் காலையில் இருந்து, அந்தநேரம் வருமட்டுமாக, ஒருக்கால் நாம் ஒருவரையொருவர் மீண்டும் ஒருபோதும் காணமுடியாமல் போகலாம். ஆனால், சந்தேகமின்றி, நான் மேசையை சென்றடைந்து, அவர்கள் கைகளை குலுக்கும் போது, கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடி வரும். பிறகு நாம் அவர் வெளியே வருவதைப் பார்ப்போம். நாம் மிகவும் சந்தோஷமாய் இருப்போம், மரத்திலிருந்து கீழே வந்ததற்காக, ஒருவேளை கோட்பாட்டின் மரமாக இருக்கலாம், ஸ்தாபனத்தின் மரமாக இருக்கலாம், அல்லது நம்முடைய சுயநலத்திலிருந்து வெளியே வந்த ஏதோ ஒன்றாக இருக்கலாம், நம்முடைய முட்டாள்தனமான பாதையிலிருந்து வெளியே வந்திருக்கலாம் அல்லது நாம் அவரை அங்கீகரிக்காத காரியத்திலிருந்து வெளியே வந்திருக்கலாம், நம்முடைய குருட்டுத் தனத்திலிருந்து ஒளியினிடத்திற்கு வெளியே வந்திருக்கலாம். அப்போது நாம் அதைக்குறித்து மகிழ்ச்சி யாய் இருப்போம், அவர் வெளியே வருவதை நாம் பார்க்கும் தருணத்தில்; அவருடைய எல்லா இராஜரீக ஆடைகளோடு மேசையினிடத்தில் நடந்து வந்து, தமது விலைமதிக்கமுடியாத கரத்தினால் நம்முடைய கண்களி லிருந்து வரும் கண்ணீரை துடைத்து, “அழாதே! எல்லாம் முடிந்துவிட்டது. கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் நுழையுங்கள். உலகத்தோற்றமுதல் உங்களுக்காக அவை ஆயத்தம் பண்ணப் பட்டவை யாயிருக்கிறது” என்று கூறுகையில் நாம் மகிழ்ச்சியாய் இருப்போம். அதுவரை பிதாவே எங்களோடு தங்கியிரும். எங்களோடு வீட்டிற்கு வாரும்; எங்களோடு தங்கியிரும், அந்த மணிநேரம் வரையிலுமாக. இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம், ஆமென். [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறாள். ஒலிநாடாவில் காலியிடம் –ஆசி.] நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் அவர் முந்தி... 166. நான் மரத்தின் மீது ஏறியபோது அவர் இன்னும் என்னை நேசித்தார். சம்பாதித்தார்... பாருங்கள் என்னமாதிரியான ஒரு மரத்தின் மேல் அவர் எனக்காக ஏறினார். அது ஒரு சிலுவை, நிந்திக்கத்தக்கதான ஒரு மரம். கல்வாரி மரத்தின் மேல்... 167. பாருங்கள், உன்னுடைய மரத்தினின்று உன்னை விடுவித்து கீழே கொண்டு வர, அவர் எப்படிப்பட்டதான மரத்தில் ஏறினார்! “நான்;...” 168. இப்போது, நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியாமல் அவரை உங்களால் நேசிக்கமுடியாது. “நான்;...” இப்போது சரியாக மேசையின் குறுக்காக சென்று, எதிரே உள்ள யாரோ ஒருவரிடம், “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக... யாத்ரீகர்களே“ என்று கூறுங்கள். ஏனெனில் முந்தியவர் நேசித்ததால் என் இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தில் 169. அவரை நீங்கள் நேசிக்கவில்லையா? ஏனெனில் உன்னுடைய மரத்திலிருந்து உன்னை கொண்டு வரும்படியாக, உனக்காகத்தான் அவர் அந்த மரத்திற்கு சென்றார். இந்தக் காலையிலே அவரை உன்னோடு உன் வீட்டிற்கு அவர் வர வழி செய்வாயா? எத்தனை பேர் அவரை கூட்டிச் செல்வீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஜசபையார் “ஆமென்” என்கின்றனர் -த.ஆ.ஸ தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 170. வர்த்தக புருஷர்களே, புறப்படுவதற்கு முன்பு, உங்களுடன் சற்று பேசவிரும்புகிறேன். 171. இப்போது, நீங்கள் கிறிஸ்தவராக இல்லாதிருந் தால், நீங்கள் கிறிஸ்தவர்களோடு தொடர்பில் இல்லாதிருந் தால், ஜனங்களாகிய நீங்கள், உங்கள் கரங்களை உயர்த்தியபோது கிறிஸ்துவை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந் தால், இங்குள்ள ஏதாவது ஒரு போதகரிடம் செல்லுங்கள், அவர்களிடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கூறுங்கள். அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள். இங்கே உள்ள இந்த சிறு பையனுக்காக, கறுப்பின சகோதரன், யாரோ ஒருவர் அல்லது ஒரு போதகர் ஒரு கடிதத்தை எழுதினார். கடந்த இரவு இந்த வாலிபன் அங்கே உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்; அவன் அதை விசுவாசித்தான்; அது அவனுக்குக் கிடைத்த கிருபை. பாருங்கள்-பாருங்கள்? அது? எப்படி அந்தப் பையன், எப்படி அந்த ஆவி சுற்றி திரும்புகிறது! பில்லி அதைப்பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். என் மனைவி மற்றும் அவர்கள் எல்லோரும் வீட்டிற்கு சென்ற பிறகு. திரும்பிச்சென்றான். அவன் அங்கே இந்த மூலையில் இருந்தபோது-இங்கே சுற்றி சென்று அதை கண்டான். பாருங்கள். அவரை வீட்டிற்கு கொண்டு வரும்படியாக. இராஜாதிபத்தியம்! அவரை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் சென்று ஒரு குழுவினரோடு சேர்ந்து எங்காவது அவர்களோடு, தேவனுடைய முழுவார்த்தையை பிரசங்கிக்கக் கூடியவர்களோடு ஐக்கியம்கொள்ளுங்கள். எதையும் பொருட்படுத்தாமல், அந்த வார்த்தையோடு தரித்தி ருங்கள். பாருங்கள். அதுசரியே! 172. வர்த்தகப் புருஷரே, சகேயுவுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் எரிகோவின் ஒரு சுவிசேஷ வர்த்தக புருஷர்களின் ஒரு அங்கத்தினராக மாறியுள்ளான். அது சரியே. அவன் கீழே, இந்த அத்தியாயத்துடன், அதைச் சார்ந்ததாய் இருக்கிறான். அது அவசர அவசரமாக இருப்பது போல் தென்படலாம், ஆனால் அது அவ்வாறு உண்மையாக உள்ளது. ஒரு முழு சுவிசேஷத்தின் அத்தியாயத்தை தவிர, இயேசு வேறு எதையும் நிறுவவில்லை என்று நிச்சயிக்கிறேன். சகேயுவும் அவரோடு இணைந்து கொண்டான். ஆகவே இப்போது சகேயுவே, நீயும் அதே காரியத்தைச் செய். 173. நாம் இன்றிரவு சந்திக்கும் வரை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள மேய்ப்பரிடம் மீண்டும் ஆராதனையை ஒப்புவிக்கிறேன்.